பொட்டுக்கடலைக்குள் எவ்ளோ ஆரோக்கிய விஷயம் புதைஞ்சி கிடக்குது தெரியுமா ?

 
pottu kadalai pottu kadalai

பொட்டுக்கடலையில் அதிகளவு புரத சத்துக்களும் வைட்டமின் சத்துக்களும் உள்ளதால், இதை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், தசைகள் மற்றும் நரம்புகள் வலுப்பெறும். மேலும் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. கடினமாக உழைப்பவர்கள் சிறிதளவு பொட்டுக்கடலை சாப்பிட்டால் உடலின் சக்தியை அதிகரிக்கும்.

பொட்டு கடலையில் உள்ள பல வகையான சத்துக்கள் !!

பொட்டுக்கடலை பல இடங்களில் பல பேர்களில் அழைக்கப்படுவதுண்டு. உடைத்த கடலை, பொட்டுக்கடலை, பொரிகடலை,பொட்டுக்கடலா போன்றவை அதன் பெயர்களாகும். மற்ற பருப்புகளை போல இதற்கும் பல்வேறு மகிமைகள் உண்டு.  இது ஒரு மிக சிறந்த புரத பொருள்.நார்ச்சத்தும், கொழுப்பு அமிலங்களும்  இதில் அதிகமாக இருக்கின்றன. பொட்டுக்கடலை மிக குறைந்த கலோரிகள்  கொண்டது. இரும்பு சத்து  மிகவும் அதிகம் கொண்டது. உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துகள் ஆகிய வைட்டமின் ஏ , வைட்டமின் பி 1 , பி 2, பி 3 , வைட்டமின் சி, வைட்டமின் டி ஆகியவை இவற்றில் உண்டு. மற்ற பருப்புகளை விட மொறுமொறுப்பாக இருக்கும். அதனால் இதனை வேக வைத்து உண்ணாமல் அப்படியே சாப்பிடலாம். மெல்லுவதற்கு மென்மையாக இருக்கும். கொழுப்பு சத்து குறைவாக இருப்பதால் எடை குறைப்பிற்கு மிகவும் சிறந்தது.

 

இரும்பு சத்து மற்றும் கலோரிகள்:

பொட்டுக்கடலை குறைந்த கலோரிகள் கொண்டது. 100கிராம் பொட்டுக்கடலையை 480 கலோரிகள் உள்ளன. இரும்பு சத்து அதிகமாக உள்ளது. பொட்டுக்கடலை நார்ச்சத்து அதிகமுள்ள ஒரு  சிற்றுண்டியாகும்.

செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது:

உடல் வளர்ச்சிக்கு தேவையான  பலவகை ஊட்டச்சத்து கூறுகள் பொட்டுக்கடலையில்  உள்ளன. நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான புலன்களை சீராக இயங்க வைக்கிறது. இதன் மூலம் செரிமான கோளாறுகள்  தவிர்க்கப்  படுகின்றன.

மலச்சிக்கலுக்கு சிறந்தது:

குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நார்ச்சத்து உள்ள உணவாக இருப்பதால் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. பெருங்குடலை நீர்ச்சத்தோடு வைத்திருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

 

இரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது:

பெண்களின் ஹார்மோன் சுரக்கும் அளவை கட்டுப்படுத்துகிறது. மற்றும் இரத்த சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைக்கிறது.

ஆற்றல் அதிகரிக்கும்:

குழந்தைகள் பொட்டுக்கடலை உண்பதால் அவர்களின் ஆற்றல்  அதிகரிக்கிறது. பொட்டுக்கடலை அதன் நன்மைகளுக்காகவே  அனைவராலும் போற்றப்படுவதாகும். இதை மாலை வேளைகளில் ஒரு சிற்றுண்டியாக குழந்தைகளும் பெரியவர்களும் உண்ணலாம்.

இதயத்திற்கு நல்லது:

பொட்டுக்கடலையில் மாங்கனீஸ் அதிகமாக உள்ளது. மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான  போலேட் , காப்பர் , பாஸ்போரஸ் போன்றவற்றையும் அதிகமாக கொண்டுள்ளது. ஆகையால் கொலெஸ்ட்ரோல் அளவை குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது. இவற்றில் உள்ள அதிகமான ஊட்டச்சத்துகளால் இதய நோய் வராமல் தடுக்கிறது.

 

இறைச்சிக்கு ஒரு மாற்று:

கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. இதில் புரத சத்து அதிகமாக உள்ளதால் இதனை இறைச்சிக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

பொட்டுக்கடலை துவையல் :

பொட்டுக்கடலையுடன் பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டுவது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து 3-4 நாட்கள் சாப்பிடுவது உடல் நலனை சீராக்கும்.

மாதவிடாய்:

பெண்கள் மாதவிடாய் நாட்களை சில தினங்களுக்கு தள்ளி போட விரும்பும் போது அவர்கள் பொட்டுக்கடலையை பயன்படுத்தலாம். காலையில் வெறும் வயிற்றில் 1 கை பொட்டுக்கடலை எடுத்து சாப்பிடலாம். பிறகு 1 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் தினசரி பானங்களை அருந்தலாம். இதன் மூலம் அந்த நாளில் மாதவிடாய் வருவது தடுக்க படுகிறது.

நம் வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருளை வைத்து நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதற்கு பொட்டுக்கடலை ஒரு எடுத்துக்காட்டு