நெட்டி முறிக்கும் பழக்கத்தால் உங்க முட்டியே உடையும்னு சொன்னா நம்ப முடியுதா ?படிங்க புரியும்

 
netti

உங்கள் கைவிரல்களில் அடிக்கடி நெட்டி முறித்தல் கெட்ட பழக்கம் என்பதை நீங்கள் அறியாதவர்கள் என்றால், உடனே தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்கள் விரல்களை நீங்கள் நிரந்தரமாக இழக்க நேரிடும்.

சிலர் அவ்வப்போது, தங்கள் கைகளை அடிக்கடி வளைத்து, விரல்களில் அழுத்தத்தை தந்து நெட்டி முறித்துக் கொண்டு இருப்பார்கள். நெட்டி முறிக்கும் போது ஏற்படும் சத்தம், அவர்களுக்கு இனிய இசை போன்று கேட்குமோ என்னமோ!!!. இது உங்களுக்கு ஏதோ ஒரு நிவாரணத்தை தருவதாக நீங்கள் உணர்கிறீர்கள். ஆனால், அது உண்மை அல்ல. நீங்கள் தொடர்ந்து இதுபோன்று கைவிரல்களுக்கு அழுத்தம் தந்து நெட்டி முறித்து வந்தால், அது உங்கள் கைவிரல்களில் உள்ள எலும்புகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

பொதுவாக நம்மில் பலருக்கு விரல்களை அடிக்கடி நெட்டி முறிக்கும் பழக்கம் இருக்கும்.  உண்மையில் இது தவறான பழக்கம் ஆகும். ஏனெனில் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

 நம் விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே 'சைனோவியல்' எனப்படும் உயவு திரவம் உள்ள நிலையில், நாம் நெட்டி முறிக்கும்போது, இந்தத் திரவம் வேகமாக ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு நகர்கிறது.

அப்போது, நெட்டி முறிக்கும் இடத்தில் வெற்றிடம் தோன்றி, 'நைட்ரஸ் ஆக்ஸைடு' உருவாகிறது. அதன் காரணமாக அதன் உள்ளே உருவான குமிழ்களும் வெடிக்கின்றன. விரல்களை நெட்டி முறிக்கும் போது சத்தம் வருவதற்கு இதுவே காரணம். 

 அதிலும் விரல்களை நெட்டி முறிக்கும் பழக்கம் மூட்டுவலி பிரச்சனையை அதிகரிக்கிறது என்று பலர் கூறுகிறார்கள்.

தற்போது  அடிக்கடி விரல்களை நெட்டி முறிப்பது நமது ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.

விரல்களை மீண்டும் மீண்டும் நெட்டி முறிப்பது எலும்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அடிக்கடி நெட்டி முறிக்கும் போது ஏற்படும் சத்தம் எலும்பு பிரச்சனையின் அறிகுறியாகும். எனவே இவற்றை தவரிப்பது நல்லது. 

நீண்ட நேரம் விரல்களை நெட்டி முறிப்பது கையின் பிடியின் வலிமையைப் பாதிப்பதோடு, கைகளில் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.

 எப்போதாவது நெட்டி முறிப்பதில் தவறில்லை. ஆனால், அதையே பழக்கமாக கொண்டிருந்தால் மூட்டுவலி ஏற்படும் அபாயம் உள்ளது.