இந்த பிரச்சினை உள்ளவர்கள் ,இரவில் பால் குடிச்சா என்னென்ன பிரச்சினை வரும் தெரியுமா ?

 
milk

பிறந்ததிலிருந்து பால் நம்முடன் அதன் வண்ணம் மாறா இனிப்புடன் கடைசி வரைஒட்டியே வருகிறது. பாலின் சுவை மட்டுமா நம்மை கட்டிப்போடுகிறது, நம் காதுகளில் சிறு வயதிலிருந்தே சொல்லப்பட்ட கால்சியம் சத்தும்தான், நாம் தொடர்ந்து பாலை குடித்துவர அவசியமாக்குகிறது.
 பாலை அதன் அளவை தாண்டி நாம் தொடர்ந்து அருந்தினால் நன்மையோடு பல விளைவுகளையும் நம் உடம்பிற்கு தருகிறது.2014ல் ஸ்வதீஸ் அறிவியல் ஆய்வாளர் கார்ல் மைக்கேல்சன் பால் குடிப்பது குறித்த தனது ஆய்வில், ”நாம் பாலை குறைந்த அளவு குடிப்பதே நம் உடலிற்கு போதுமானது அந்தளவே நமக்கு நல்ல சக்தியை தருகிறது. அதை தவிர்த்து பெண்கள் ஒரு நாளைக்கு மூன்று டம்ளர் அல்லது அதற்கும் மேல் பாலை அருந்தினால் அவர்களுக்கு பல உடல் உபாதைகளை தருகிறது. குறிப்பாக இருதயத்தில் பிரச்சனை, அத்தோடு 44 சதவீதம் புற்றுநோய் வருவதற்கும் பால் ஒரு காரணமாக இருக்கிறது” என அறிவுறுத்தியுள்ளார்.

இரவில் படுக்க போகும் முன்பு பால் குடிக்கலாமா, குடிக்க கூடாதா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

டாக்டர்களில் சிலர் இரவில் பால் சாப்பிடலாம் என்கிறார்கள். இன்னும் சில டாக்டர்கள் இரவில் பால் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். எது சரி?

‘இரவில் தூங்கச் செல்லும் முன்பு யார், யார் பால் சாப்பிடலாம், யார், யார் பால் சாப்பிடக்கூடாது என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன.

என்ன சாப்பிட்டாலும் உடம்பு குண்டாகமாட்டேங்குதே என்று வருத்தப்படுகிறவர்கள், இரவு தூங்கச் செல்லும் முன்பு தாராளமாக ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.

வளரும் குழந்தைகள் நல்ல உடல் வளர்ச்சி பெற இரவில் தூங்கச் செல்லும் முன்பு, ஒரு டம்ளர் பால் சாப்பிடலாம்.

பால் என்பது ஒரு வகையில் மயக்கத்தைக் கொடுக்கிற பானம். வயதானவர்கள் இரவில் சாப்பிட்டால் நன்றாகத் தூங்கலாம்.

ஆனால், உடலில் கொழுப்புச் சத்து மிகுந்தவர்கள், உடல் இளைக்க வேண்டும் என்று நினக்கிறவர்கள், உடல் உழைப்பு நிறய செய்யாதவர்கள் இரவில் பால் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.