உங்க லிவரோட பவர் குறைஞ்சிட்டிருக்குன்னு காமிக்கும் அறிகுறிகள்

 
liver

.நம் கல்லீரல் நம் உடலில் ஏற்படும் நச்சு பொருட்களை உடைத்து வெளியேற்றும் பணியை சிறப்பாக செய்து வருகிறது .இந்த கெல்லீரலின் முதல் எதிரி ஆல்கஹால் .இந்த ஆல்கஹால் நம் கல்லீரலுக்குள் வரும்போது அதனால் நம் கல்லீரல் அதிக பாதிப்பை அடைகிறது .மேலும் இதனால் கல்லீரலில் ஏற்படும் அழுத்தத்தால் அடி வயிற்றில் வலி உண்டாகிறது .மேலும் கல்லீரலில் கொழுப்பும் சேர்கிறது .அதனால் கல்லீரலை பாதிக்க கூடிய மதுவை கை விட வேண்டும்

liquor

உங்கள் கல்லீரல் பாதிப்படைந்துள்ளது என்பதை  உங்களின் நிறமே காட்டி கொடுத்து விடும். உங்களின் கண்களோ அல்லது தோலோ மஞ்சளாக இருந்தால் அது கல்லீரல் பிரச்சினைக்கான கடுமையான அறிகுறியாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்

மேலும் உங்கள் கண்கள் அதிக வறட்சியாகவோ  இருந்தால் அதற்கு கல்லீரல் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாகும். இதுவே நீண்ட நாட்கள் இருந்தால் அதிக பாதிப்பு உள்ளது என அர்த்தம்.அப்போது உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்

மேலும் மது பழக்கத்தால் உண்டாகும் கல்லீரல் நோயானது கல்லீரலை மட்டும் பாதிக்காது. மேலும் இது முழு உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும். வறண்ட தொண்டை, பசியின்மை, மஞ்சள் காமாலை, வாந்தி போன்றவை ஆரம்ப கால கல்லீரல் நோயின் அறிகுறிகள் ஆகும். இதன் பிறகு கல்லீரல் வீக்கத்தால் அடிவயிற்றில் வலி உண்டாக்கி உடல் நலத்தை கெடுத்து ,மோசமான பாதிப்பை உண்டாக்கும் .

மேலும் விலை மதிப்புள்ள கல்லீரலை பாதுகாக்க  சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளை மூன்று வேளைகளும் சாப்பிட்டு ,எக்சர்சைஸ் செய்து வாருங்கள்