கொள்ளுவுடன் சீரகம் ,மிளகு சேர்த்து கொதிக்க வச்சி குடிச்சா எந்த பார்ட் குறையும் தெரியுமா ?

 
pepper oil

இன்றைக்கு உலகையே அச்சறுத்தி வரும் நோய் எதுவென்றால் உடல் பருமன் அல்லது ஒபிசிட்டி என்று கூறலாம் .இந்த ஒபிசிட்டி பிரச்சினையால் சிறுவர் முதல் பெரியவர் வரை அவதி படுகின்றனர் .அவர்கள் உடல் பருமனை குறைக்க எவ்ளோ மாத்திரை ,டயட் ,எக்சர்சைஸ் என்று போனாலும் உடல் பருமன் குறையாமல் அவதி படுகின்றனர் .இந்த ஒபிசிட்டிக்கு நம் முன்னோர்கள் பல இயற்கை வைத்திய முறைகளை கூறியுள்ளனர் .அதை முறையாக பின்பற்றினாலே போதும் உடல் ஸ்லிம்மாகி விடும் .கொழுப்பும் கரைந்து விடும் .இனி உடல் பருமனுக்கு சில வழிமுறைகளை கூறியுள்ளோம் .இதை பின்பற்றி ஸ்லிம்மாகி விடுங்கள்

1.உடல் பருமன் தொல்லையால் அவதிபடுவோர் சிறிதளவு கொள்ளு  எடுத்து கொள்ளவும் .பின்னர் அதனுடன் ஒரு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், மிளகுத்தூள் இவை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து கொள்ளவும் .பிறகு அதை வடிகட்டி இரவு தூங்கும் முன்னர் ஒரு டம்ளர் வீதம் குடிக்க கொழுப்பு கரையும்

kollu

2.பருத்த உடலால் அதை குறைக்க முடியாமல் அவதிப்படுவோர் இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு , எலுமிச்சை சாறு, புதினாச்சாறு இவை அனைத்தும் 2.5 மில்லி வீதம் எடுத்து கொள்ளவும் .பின்னர் அதில் 5 மில்லி தேன் கலந்து கொள்ளவும் .இவற்றை காலை, இரவு சாப்பிட்டு வாருங்கள் .இதன் மூலம் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனைக் குறைத்து விடலாம் .