ஆண்களின் கசமுசா விஷயத்துக்கு வலு சேர்க்கும் கசகசாவை எப்படி சாப்பிடணும் தெரிஞ்சிக்கோங்க
கசகசா உடலை வலுபடுத்தும்,ஆண்மையை பெருக்கும்,மலத்தை கட்டும்.குடல் புழுக்களை கொள்ளும்,தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்யும்.மன அழுத்ததை சரிசெய்யும்,வாய்புண் மற்றும் வயிற்றுபுண்களை சரிசெய்யும்.நரம்பு தளர்ச்சியை சரிசெய்யும்.வயிற்று போக்கை சரிசெய்யும்.சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலிருந்து, பெறப்படும் விதைகளே கசகசா ஆகும்.
கசகசா விதைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா! பெரும்பாலும் கசகசா என்பது சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஓர் பொருள் என்றே பலரும் அறிந்திருப்பர். ஆனால் சமையலை தாண்டி கசகசா எண்ணற்ற நன்மைகளை அளிக்கக்கூடியது. உங்களது புருவத்தை உயர்த்த செய்யும் அளவு நன்மைகளையும், பயன்களையும் அளிக்கக்கூடியது கசகசா. கசகசா விதைகளினால் ஏற்படக்கூடிய நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள் பற்றி இப்பதிப்பில் விரிவாக படித்து அறியலாம்.
இரண்டு தேக்கரண்டி அளவு கசகசாவை எடுத்து , கால் டம்பளர் பாலில் ஊறவைத்து ,உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி கட்டுப்படும்.
கசகசா மற்றும் பூனைகாலி விதை இரண்டையும் சம அளவு எடுத்து , அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இதில் 5 கிராம் அளவு எடுத்து, பாலில் கலந்து இரவு நேரங்களில் உண்டுவர நரம்புதளர்ச்சி நீங்கும்.உடல் வலிமை பெறும்.
வயிற்று போக்கு ஏற்படும் நேரத்தில் சிறிதளவு கசகசாவை வாயிலிட்டு மென்று சிறிதளவு நீர் குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.
கசகசா, முந்திரி பருப்பு , பாதம் பருப்பு இவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து பொடியாக்கி காலை,மாலை என இருவேளை ஓரு ஸ்பூன் அளவு எடுத்து உண்டுவர உடல் வலிமை பெறும்.
தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரங்களில் கசகசாவை பாலில் அரைத்து உண்டால் தூக்கம் நன்றாக வரும்.
கசகசாவை துவையலாக அரைத்து உண்டு வந்தால் உடல் வலிமை பெறும்.நிரழிவு நோய் கட்டுப்படும்.தூக்கம் நன்றாக வரும். நரம்புகள் வலுவாகும் , விந்து கட்டும்,உடல் வலிமை பெறும்,ஆண்மை பெருகும்,உடல் பொலிவு பெறும்,நரம்புகள் பலம் பெறும்...
கசகசா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அது செரிமானத்திற்கு உதவும். இந்நார்ச்சத்து மலத்தை ஒன்றாக திரட்டி, மலச்சிக்கல் பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது (1). ஆனால், இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
வாய் புண்கள்
இது குறித்து ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், வாய் புண்களை குணப்படுத்த கசகசா விதைகள் உதவுவதாக நிகழ்வு சான்றுகள் கருத்து தெரிவிக்கின்றன. கசகசா விதைகள் உடலுக்கு குளிர்ச்சி அளிக்க உதவி, வாய் புண்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன.
சில நசுக்கிய உலர்ந்த தேங்காய், பொடித்த சர்க்கரை மிட்டாய், நில கசகசா விதைகள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்; வாய் புண்களிலிருந்து உடனடி நிவாரணம் பெற, இக்கலவையை ஒரு சிறு சிறு துண்டுகளாக செய்து, மிட்டாய் போல மென்று சுவைத்து சாப்பிடவும்.


