இலவசமா கிடைக்கும் இந்த இலையின் மகத்துவம் தெரிஞ்சா ,இதை தூக்கி போட மாட்டீங்க

 
kariveppilai

கறிவேப்பிலையில் இரும்பு சத்தும், ஃபோலிக் அமிலமும் இருப்பதால், உடலில் ரத்த சோகையை அண்ட விடாமல் தவிர்க்கிறது. மேலும், கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோய் எனப்படும் டயாபடிஸ் உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறதுகறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஒரு உணவு பொருளாகும்.

கறிவேப்பிலை பயன்கள் | Karuveppilai benefits in Tamil

காலையில் வெறும் வயிற்றில் சில பல கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வற்தால், வயிற்றில் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையை பெறலாம்.

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, மற்றும் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் இ, போன்ற சத்துகளும் விட்டமின்களும் நிறைந்து காணப்படுகிறது.

வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது. குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு. கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது.

ரத்தசோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொ ண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்தசோகை நீங்கும்.

 

கறிவேப்பிலை இதய நோய், பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினையில் இருந்தும் பாதுகாப்பு தரும்.