சுகர் பேஷண்டுகளுக்கு இன்சுலினை இயற்கையாக அள்ளி தரும் உணவுகள்

 
sugar

இந்தியாவில் நாளுக்கு நாள் சுகர் பேஷண்டுகளின் எண்ணிக்கை பெருகி வருகின்றது .இதற்கு எவ்வளவோ  நவீன வைத்தியமுறை ஆங்கில வைத்தியத்தில் வந்தாலும் ,ஆயுள் முழுக்க மாத்திரை உதவியுடன்தான் வாழ வேண்டியுள்ளது .

சுகர் பேஷண்டுகளுக்கு இன்சுலினை இயற்கையாக சுரக்க வைக்கும் சில உணவுகள்:

ladies finger for sugar patient

1.வெண்டைக்காய்

வெண்டைக்காய் நார்ச்சத்து நிறைந்த உணவாகும், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுபடுத்த உதவுகிறது. இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது.மேலும் இது மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது

2.இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக் கொள்வது இன்சுலின் உற்பத்திக்கு நல்லது. தேநீரில் இலவங்கப்பட்டை சேர்த்து குடித்து வந்தால் கணையம் போலவே இன்சுலினை இது உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது

3.பாகற்காய்

பாகற்காய் சுகர் பேஷண்டுகளின் கணையத்தை தூண்டி அதிக அளவில் இன்சுலினை சுரக்க செய்கிறது .

4.வெந்தயம்&மஞ்சள்

வெந்தயம் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதுடன், எடையைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. . சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடிப்பது சிறந்த பலனைத் தரும்.அது போல மஞ்சளை தண்ணீரில் சேர்த்து குடித்து வந்தால் இன்சுலின் உற்பத்தி உடலில் சிறப்பாக இருக்கும்