ஆரோக்கியத்துக்கு எண்ணெய் உணவுகளை உண்ட பின்பு என்ன செய்யணும் தெரியுமா ?
பொதுவாக நாம் சுத்தமின்மையாலும் ,ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதாலும் பல நோய்க்களுக்கு அடிமையாகின்றனர் .இதனால் அடிக்கடி மருத்துவமனை பக்கம் போக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் .இப்படி ஹாஸ்ப்பிட்டல் பக்கம் போகாமல் வாழ சில வழிகளை இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலர் உணவு சுவைக்கு அடிமையாகி அளவுக்கதிகமாக உண்பர் .நாம் ஆரோக்கியமாய் இருக்க எந்த உணவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது.
2.பொதுவாக அளவோடு உண்பவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் இருப்பதும், அளவுக்கதிகமாக உண்பவர்கள் பல நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்
3. சிலர் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர் .எக்ஸைஸ் செய்வதன் மூலம் சுறுசுறுப்பாக இருக்க முடியும், எலும்புகளும் தசைகளும் உறுதியாக இருக்கும், நீண்ட நாள் வாழ முடியும்.
4.அதனால் நீண்ட நாள் வாழ சிறியவர்கள் பெரியவர்கள் என எல்லாருமே உடற்பயிற்சி செய்ய வேண்டும்
5.அடுத்து மனிதர்களாகிய அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஆரோக்கிய வழிமுறைகளில் ஒன்றே சுத்தம் பேணுதல் ஆகும்.
6.அதனால் தான் கூறுவர் “சுத்தம் சுகம் தரும்” என்று. உணவு உண்பதற்கு முன்பும், பின்பும் சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுதல் உடலில் நோய் தொற்று ஏற்படாமல் நம்மை காக்கும்
7. அடுத்து சுத்தத்தில் மிக முக்கியமான ஒன்று தினமும் குளித்தல் ஆகும் .இப்படி தினம் குளித்து வந்தால் சுத்தம் உண்டாகி பல நோயிலிருந்து நம்மை காக்கும்
8.. எண்ணெய் உணவுகளை உண்ட பின்பு வெந்நீர் அருந்த வேண்டும்
முடிந்தவரை உணவில் அதிக அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

