பச்சை பட்டாணியை சாப்பிட்டால் எந்த சத்து நமக்கு கிடைக்கும் தெரியுமா ?
பொதுவாக பயறு வகைகளில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏராளமாய் உள்ளது ,அந்த வகையில் பச்சை பட்டாணியில் நம் குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகப்படுத்தி நம் உடலுக்கு நன்மை செய்கிறது ,மேலும் இது இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது .மேலும் இந்த பட்டாணியில் நன்மைகளை பார்க்கலாம்
1.காய்ந்த பட்டாணியில் புரதம், மாவுச் சத்து, கலோரிகள் அடங்கியுள்ளது
2.மேலும் இந்த பட்டாணியில் தாது உப்புக்களான இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம், கோலின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன.
3.இந்த பட்டாணியில் நார்ச் சத்து இருப்பதால் மலசிக்கல் இல்லாமல் காக்கிறது
4.அதுமட்டுமல்லாமல் இந்த பட்டாணியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் – பி காம்ப்ளெக்ஸ், ஃபோலிக் ஆசிட் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன.
5.இந்த பச்சை பட்டாணியில் பொட்டாஷியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
6.பச்சைப் பட்டாணித் தோலில் கால்சியம், இரும்புச் சத்து அதிகமாக உள்ளன.
7.இந்த பச்சை பட்டாணியில் புரதம், மாவுச் சத்து, கலோரி, வைட்டமின் – சி ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன.
8.இந்த பச்சை பட்டாணியை வாயுப் பிரச்னை இருப்பவர்களும், ஜீரண சக்தி குறைவாக இருப்பவர்களும் இதனைத் தவிர்ப்பது நல்லது.
9.இந்த பச்சை பட்டாணியை சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் குறைந்த அளவில் சாப்பிடுவதே நல்லது

