நல்லெண்ணெயை வாரம் ஒருமுறை தேய்ச்சி குளிச்சா,எந்த நோயிலிருந்து விமோசனம் கிடைக்கும் தெரியுமா ?

 
oil

 நல்லெண்ணெய் பலவிதங்களில் நமக்கு சமையல் முதல் நாட்டு வைத்தியம் முதல் பயன்படுகிறது.அதன் மருத்துவ நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

நம் முன்னோர்கள் எண்ணெய் குளியலின் சிறப்புகள் பற்றி தெரிந்ததால்தான் புதன், சனி நீராடு என்று சொல்லி வைத்தார்கள் .ஆனால் இன்றைய நாகரீகம் என்ற பெயரில் அதை மறந்து போனதால் ஹாஸ்ப்பிட்டலில் கூட்டம் குவிகிறது .நல்லெண்ணெயில் காரமோ, கசப்போ, இனிப்போ, துவர்ப்போ எது கலந்தாலும் இனிய சுவை தரும். அதனால் அதை தேச்சி குளித்தல் உடல் அழுக்குகளை வெளியேற்றும் 
எள் மருத்துவ பயன்கள்
குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த 5கிராம் அளவு எள்ளை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால் பால் அதிக அளவு சுரந்து குழந்தையின் பசியாறும் 

oil

கண் சிவப்பு, கண் வலி,உடல் உஷ்ணம்  போன்ற உடல் நல கோளாறு உள்ளவர்கள்  .எள் எண்ணெய்யை ( நல்லெண்ணெய்) 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர இந்த பிரச்சினையெல்லாம் பஞ்சாய் பறந்து விடும் 

கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் ,இதற்கு கண்ணாடி போடுபவர்கள், அதை கழட்டி விட்டு பார்வை தெளிவு பெற எள் பூவை நெய்யிலிட்டு வதக்கி இரவில் கண்ணின் மீது வைத்துக் கட்ட கண் பார்வை தெளிவடையும்.
உடையாத பல கட்டிகளை உடைக்க ,பல ஆங்கில மருத்துவம் செய்யாமல் எள் இலையை நெய்யில் வதக்கி கட்டிகள் மீது கட்ட அவை பழுத்து உடையும்.

 பழங்காலத்தில்  இயற்கையான கருத்தடை முறைக்கு அதிகமாக எள் கொடுத்து வந்தனர் .இது இயற்கை கருத்தடை முறை யாக  இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்