தயிருக்குள் நம் தோலுக்கு இவ்ளோ நன்மையிருக்கா ?-உபயோகப்படுத்தும் முறைகள்

 
curd

அன்றாடம் நாம் உணவில் சேர்த்து கொல்லும் தயிரில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .தயிருக்குள் ஏராளமான புரத சத்துக்கள் அடங்கியுள்ளதால் ,அதன் மூலம் நமக்கு கிடைக்க கூடிய நன்மைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் 

நாம் தினமும் சேர்த்து கொள்ளும் தயிரில் அதிகப்படியான ஊட்டச்சத்து ( Nutrition ), புரதம் ( protein ), கால்சியம் ( calcium ) ஆகியவை அடங்கியுள்ளதால் இது உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் 

curd

குடலில் ஜீரணத் தன்மை குறைவாக உள்ளவர்கள் தயிர் நிறைய சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் தன்மையை அதிகரிக்க முடியும். தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் இந்த செரிமான தன்மையை அதிகரிக்கும் .

பொதுவாக  பால் 1 மணி நேரத்தில் 12 சதவீதம் மட்டுமே ஜீரணமாகும் தன்மை கொண்டது .ஆனால் அதிலிருந்து பெறப்படும்  தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும்
மனித  உடலுக்கு தேவையான வைட்டமின் B -யை உறிஞ்சுவதற்கு, கிறகிப்பதற்கு தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் செயல் படுகிறது .
 
தலை முடியில் பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் தயிரைக் கொண்டு தலையில் மசாஜ் ( (massage) செய்வதன் மூலம் பொடுகு தொல்லையிலிருந்து விடுபடலாம் 

ஒபிசிட்டி என்று கூறப்படும் உடல் பருமன், மன அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆகியவை உள்ளவர்கள் கொழுப்புச் சத்து உள்ள பாலில் தயாரிக்கப்பட்ட தயிரை  தொடர்ந்து சாப்பிட்டு வர அந்த  நோய்கள் எல்லாமே பஞ்சாய் பறந்து போகும் 

ஒல்லியாக இருக்கும் நோஞ்சானாக இருக்கும் குழந்தைக்கு ஒரு கிண்ணம் தயிரில் சர்க்கரை அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும்

ஒரு கிண்ணம் தயிரைக் கொண்டு தோல்களுக்கு மசாஜ் (Skin Massage) செய்வதன் மூலம் தோலின் நுண்ணிய பகுதிகளிலுள்ள அழுக்குகள் நீங்கி (Dead cells )ஸ்கின்  புத்துணர்ச்சி பெறும் 

முகத்துக்கு தயிரின் நன்மை  :நன்கு மசித்த பப்பாளி, ஒரு கரண்டி தேன், சேர்த்து இரண்டு கரண்டி தயிர், சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும்.தயிருடன் தோடம்பழம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் முகத்தில் தடவி வந்தால் முகம் பளிச்சென்று மாறும் .

நமது நாடி நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தயிர் அதிக நன்மை பயக்கக் கூடியது. தூக்கமில்லாதோர் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெற்று மறுநாள் புத்துணர்ச்சியுடன் பணியாற்றுவர்