இலையில் ஒதுக்கி வைக்கும் கறிவேப்பிலையின் பலன் தெரிஞ்சா ,பதுக்கி வச்சி சாப்பிடுவீங்க

 
food

கறிவேப்பிலை தென்னிந்திய உணவு வகைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. தமிழர்கள் சமைக்கும் கறி மற்றும் உணவு பதார்த்தங்களில் கறிவேப்பிலை இடும் வழக்கத்தை கொண்டவர்களாவர். இவ்வழக்கம் தமிழரின் பண்பாட்டுத் தாக்கம், உணவு வகைகளின் தாக்கம் போன்றவற்றால் அவர்களிடம் தோற்றம் பெற்றவைகளில் ஒன்றாகும். கறிவேப்பிலை வடயிந்தியரின் ஒரு சில கறி பதார்த்தங்களில் மட்டும் பயன்படுகின்றது. இருப்பினும் தென்னிந்தியர்களின் பயன்பாட்டில் உள்ளதைப் போன்று வடயிந்தியர்களின் பயன்பாட்டில் அதிகம் பயன்படுவதில்லை

இது சுவையின்மை, பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல், தொண்டைக் கம்மல். ஆகியவை நீங்க கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து உட்கொண்டால் கண்பார்வையில் தெளிவும், நரையற்ற உரோமம் ஆகியவற்றைப் பெற முடியும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை, மாலையில் 10 கறிவேப்பிலை என மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து மூன்று மாதம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். இளம் வயதில் நரையை தடுக்க கறிவேப்பிலை உதவும். அதுமட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உணவிலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால் நரை முடி நீங்கப் பெறுவர்.

கறிவேப்பிலையே பெரும்பாலான வீட்டுல எல்லாரும் தாளிக்கறதுக்கும் நறுமணத்துக்காகவும் மட்டும்தான் பயன்படுத்துறோம். ஆனா இதை உணவுல தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தா, நல்ல ஆரோக்கிய பலன்களைக் கொடுக்குது. உதாரணமா இந்த கருவேப்பிலையை மிளகு, சீரகம் சேர்த்து அரைச்சு பொடி செஞ்சு சாதத்துல சேர்த்து சாப்பிடலாம். கருவேப்பிலையை துவையலா அரைச்சும் சாப்பிடலாம். இதனால வயிற்றுப்போக்கு, மலக்கட்டு சரியாகுது, செரியாமை பித்தம் போன்ற பிரச்சனைகளும் குணமாகும். பசியை தூண்டுறதோட, பித்தவாந்தி சரியாகவும் இது உதவுது. இதோட இலை, வேர், பட்டை இந்த மூனுலயுமே மருத்துவ குணம் இருக்கு. இலை, பட்டை, வேரை எடுத்து தண்ணியில போட்டு அந்த நீரை குடிச்சிட்டு வந்தா வயிற்றுவலி குணமாகும்.

 

இந்த கறிவேப்பிலையில கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் E… இப்டி பல்வேறு சத்துகள் நிறைஞ்சிருக்கிறது  .

தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு

இப்போ இளைஞர்கள் மட்டுமில்லாம நடுத்தர வயதினருக்கும் பெரிய பிரச்சனையா இருக்கறது தலைமுடி பிரச்சனை! இப்பெல்லாம் இளைஞர்கள் கிட்ட இளநரை பெரிய பிரச்சனையா இருக்கு. நம்ம தலைமுடி நரச்சிடாம பாதுகாக்க கருவேப்பிலை உதவுது. நாம தினமும் தேவையான அளவு கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தா, நரைமுடி பிரச்சனையை தடுக்க முடியும். அதுமட்டுமில்லாம, முடி கொட்டுறது மாதிரி பலவிதமான தலைமுடி பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுது இந்த கறிவேப்பிலை. இதுக்கு நாம தினசரி உணவில கறிவேப்பிலையை சேர்த்துக்கறதோடு, தேங்காய் எண்ணெயோட கருவேப்பிலையை சேர்த்து காய்ச்சி அதை தலைக்கு தடவியும் வரலாம்.

கறிவேப்பிலையை அரைச்சு வடிகட்டி ஜூஸாவும் தினமும் காலையில குடிச்சிட்டு வரலாம்.

கறிவேப்பிலை சாதப் பொடி செய்முறை:

கறிவேப்பிலை இலைகளை நிழலில் உலர்த்தி, அதோடு மிளகு, சீரகம், சுக்கு சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து, சாதத்தில் நெய்யுடன் பிசைந்து சாப்பிடலாம்