தினம் ரெண்டு கிராம்பு சாப்பிட்டால் அது பெண்டு நிமிர்த்தும் நோய்கள் .

 
clove

கிராம்பு நமது சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு மூலிகை பொருள் .இதை நமது உணவில் சேர்த்து வந்தால் ஏராளமான நன்மைகளை கொடுக்கும் .மேலும் இதன் பயன்கள் பற்றியும் அதை எப்படி யூஸ் பண்ணால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

health tips of cloves in hot water

கிராம்பில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. நோய் தொற்றுக்கு எதிராக போராடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

செரிமானம் (Digestion)&கல்லீரல் ஆரோக்கியம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு,நமது வயிற்றில்  செரிமான மண்டலம் சீராக இயங்க வேண்டும். இந்த பிரச்சினையை கிராம்பு சிறப்பாக தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டது . கிராம்பு நம் உடலில் செரிமான பிரச்சினைகளை போக்க உதவும்.

 கல்லீரலின் செயல்பாட்டை ஆரோக்கியமாக்க, தினமும் ரெண்டு கிராம்பு சாப்பிடுவது நன்மை பயக்கும்.அதிகமாக கிராம்பு எடுத்து கொள்வதும் சில பக்க விளைவுகளை உண்டாக்கும் .அதனால் அளவாக எடுத்து கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்  கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் என்ற பொருள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

பல்லுக்கு உறுதி

கிராம்பு பல்லுக்கு உறுதி சேர்க்கும் வல்லமை படைத்தது .அதை பல்வலி மற்றும் பல் சொத்தை போன்ற தொல்லைகள் இருப்போர் பய்னபடுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் .

காலையில் 2 கிராம்புகளை வாயில் போட்டு அப்படியே வைத்திருந்தால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நீக்கும். ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாய் சுகாதாரமாக இருக்கும். கிராம்பு மற்றும் துளசி பயன்படுத்தி வீட்டில் மவுத்வாஷ் செய்து பயன்படுத்தலாம்.

எலும்புகளுக்கு வலிமை

மேலும் மூட்டு எலும்புகள் பலவீனமாக உள்ளவர்கள் கிராம்பை யூஸ் செய்யலாம் .கிராம்பில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீஸ் மற்றும் யூஜெனோல் உள்ளன. அவை எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கிராம்பு உட்கொள்வது எலும்புக்கு உறுதி அளிக்கிறது.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்று சுகாதார நிபுணர்கள் அதை பரிந்துரை செய்கின்றனர்