கிராம்பு பொடி மூலம் எந்த நோயெல்லாம் ஓடிப்போகும்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக கிராம்பு சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது .இந்த கிராம்பு மூலம் எந்த நோய்களை குணப்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், குணமாகும்.
2.கிராம்பு எண்ணெய்யை கெட்டு போன ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
3.கிராம்புப் பொடி உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், உடல் சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் பலன் அளிக்கிறது.
4.மேலும் ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிப்பதால் , ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
5.கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் எப்பேர்ப்பட்ட வாந்தியும் நிற்கும்.
6.கிராம்பில் உள்ள ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
7.நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் எப்பேர்ப்பட்ட காலராவும் குணமடைந்து ஆரோக்கியம் பிறக்கும் .
8. சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
9.சிலருக்கு தொண்டை அடைப்பால் எரிச்சல் ஏற்படும்.இந்த எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
10.மேலும் கிராம்பு பொடி மூலம் ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.


