அடி ஆத்தி !,அத்தி பழத்துக்குள்ள இம்புட்டு விஷயமா அடங்கியிருக்கு..

 
aththi

அத்திப்பழம் நம்முடைய மூளையில் செரோடோனின் அளவை அதிகரித்து ,மன அழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்திற்கு வழி செய்கிறது

அத்திப்பழம்  முகப்பரு வராமல் தடுக்க உதவுகிறது.

aththi

 அத்தி மரத்திலிருந்து எடுக்கப்படும் அத்திப் பழத்தில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது .மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது

இதனை தினமும் இரண்டு பழங்கள் எடுத்து கொண்டால் உடலுக்கு பல நன்மையை தந்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது .

அத்திப் பழம் தினமும் எடுத்துக் கொள்ளும்போது கணிசமான அளவில் உடல் எடையைக் குறைத்து ,தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டி முடி வளர்ச்சிக்கு வழி செய்கிறது .

அத்திப்பழத்தை தினம் சாப்பிடும்போது  உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும்.

 தினமும் சில அத்திப்பழங்களை சாப்பிட்டு வருவோருக்கு  மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு போன்ற அஜீரணக் கோளாறின் காரணமாகும் உண்டாகும் பிரச்சினைகைளைத் தவிர்க்க முடியும்.

 ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை பொடியாக நறுக்கி, ஒரு கிளாஸ் பாலுடன் கொதிக்க வைத்து காலையில் குடித்து வருவோருக்கு உடலில் ஆற்றல் அதிகரித்து யானை பலம் கிடைக்கும்