அரை கீரையின் அருமை தெரிஞ்சவங்க அடிக்கடி ஆஸ்பத்திரி பக்கம் போக மாட்டாங்க

 
arai keerai

அரைக்கீரை தமிழர் சமையலில் இடம்பெறும் கீரைகளில் ஒன்றாகும். சித்த மருத்துவத்தில் காய்ச்சல், குளிர் சன்னி, கப நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக இக்கீரை கூறப்பட்டுள்ளது. தோசை, கூட்டு, சூப், கூட்டல், வடை, மசியல் என பல வகைகளில் அரைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதுதெற்காசியாவிலும் தென்கிழக்காசியாவிலும் , ஆப்பிரிக்காவிலும் போற்றி உண்ணப்படுகிறது. அரைக்கீரை உடலுக்கு வெப்பத்தை கொடுப்பதினால் மகப்பேறு பெற்ற பெண்களுக்கு ஒரு முக்கிய உணவாக அளிக்கபடுகிறது. அதோடு பிரசவத்தால் எற்படும் உடல் மெலிவை போக்கி, உடலுக்குச் சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றது

அரை கீரைகளின் இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது.

காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமானம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அரை கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது.

அரைக்கீரை பயன்கள்   Arai Keerai Benefits in Tamil

அரை கீரை கடுமையான மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.

 

ஜுரம், காய்ச்சல் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு உடல் சூடு அதிகமாகி பலவீனத்தை ஏற்படுத்தும். மேலும் கை, கால்களில் வலியையும் உண்டாகும். இந்த ஜுரம், காய்ச்சல் தீர்ந்ததும் உடலுக்கு மீண்டும் பழைய பலம் திரும்ப அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மனதிற்கும் தெம்பை ஏற்படுத்தும்.

கல்லீரல் பாதிக்கப்படுவதால் தான் மஞ்சள் காமாலை, ஹெப்பாடிட்டீஸ் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்கள், கல்லீரல் பாதிப்புகள் கொண்டவர்கள் ஏற்கனவே சாப்பிடும் மருந்துகளோடு அரை கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டாலே கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து உறுப்பானது பலமாகும்.

 

குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும், அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலையை உண்டாக்குகிறது. அரை கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். பின்னாளில் சிறுநீரகத்தில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு உறுப்பு நன்றாக வேலை செய்யும். மேலும் சிறுநீரை நன்கு பெருகி உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும். 

திருமணமாகி பல ஆண்டுகளாக ஒரு சில பெண்களுக்கு கருத்தரிக்க இயலாத நிலை இருக்கும். இவர்கள் தங்கள் உணவில், வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது, அரைக்கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால், அவர்களின் கருப்பை பலம் பெரும்.

கருப்பை உள்ளே தங்கி இருக்கும், நச்சுக்கள் எல்லாம் வெளியேறி கூடிய விரைவில் கருத்தரிக்கும் நிலை உண்டாகும்.

பலவகையான புற்றுநோய்களில் வயிற்றுப் புற்று ஒன்று. இந்த புற்றுநோய் வயிறு பகுதியினை மட்டும் தாக்குவதில்லை. அதனுடன் தொடர்பு உடைய குடல் பகுதி மற்றும் கணையம் போன்ற அணைத்து பகுதிகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது.

அரைக்கீரையை அதிக அளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகின்றது.