தோலுடன் இந்த பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

 
apple

மருத்துவர் வீட்டுக்கு போகாமலிருக்க தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று கூறுவதை கேள்வி பட்டிருப்போம் ,அதனால் அந்த ஆப்பிளை சுத்தம் என்ற பெயரில் தோலை நீக்கி விட்டு பலர் சாப்பிடுவதை பார்த்தருப்போம் .ஆனால் அந்த தோலில் தான் சத்துக்கள் அடங்கியுள்ளது .எனவே தோல் நீக்காமல் அந்த ஆப்பிளை சாப்பிட வேண்டும் ,மேலும் சுவாச பிரச்சினைக்கு இப்படி ஆப்பிள் சாப்புடுவது சிறந்த பலனை கொடுக்கும் .இதில் உள்ள ஒரு பொருள் ஞாபக மறதியை போக்க வழி செய்கிறது

apples

ஆப்பிளின் தோலுடன் சாப்பிடுவது நுரையீரலை சீராக செயல்பட வைக்கிறது.

ஆப்பிளின் தோலுடன் சாப்பிடுவது மூளைச் செல்கள் பாதிப்படைவதையும், ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுத்து, ஆர்வத்தை அதிகரித்து, ஞாபக சக்தியை கொடுத்து நம்மை காக்கிறது 

நீரிழிவு நோயாளிகள் ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடுடன் இருக்கும்.

ஆப்பிளின் தோலுடன் சாப்பிட்டால், எலும்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். முக்கியமாக மூட்டு வலி உள்ளவர்கள் ஆப்பிளை சாப்பிடுவது நல்லது. கல்லீரல், மார்பகம், குடல் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுக்கலாம்.மாரடைப்பு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.கண் புரை மற்றும் கிட்னி கற்கள் ,பல் சொத்தை போன்ற பிரச்சனைகளை நீக்கும்

கர்ப்பிணிகள் ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால், ஆப்பிள் தோலில் உள்ள ஃபோலிக் ஆசிட் மற்றும் இரும்புச்சத்தினால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.