ஊற வச்ச இந்த பருப்பு நம்மை எப்படி வாழ வச்சி காக்கும் தெரியுமா ?

 
wallnut

பொதுவாக உலர் பழங்களில் நம் உடலுக்கு ஏரளமான நன்மைகள் அடங்கியுள்ளது .அதிலும் பருப்பு வகைகளை ஊற வச்சி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் .அதிலும் பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள் நம் உடலுக்கு பல நன்மைகள் செய்கிறது

நம் உடலுக்கு நன்மைகள் செய்யும் ஊறவைத்த அக்ரூட் பருப்புகளில் கொழுப்பை குறைக்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன.மேலும்  இது நமது உடலில் நீரிழிவு நோயினால் ஏற்படும் இதய பிரச்சனைகள் மற்றும் உடல் பருமன் போன்ற பாதிப்புகளை குறைப்பதற்கு உதவி நமக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது .

உயிரணுக்கள் உற்பத்திக்கு உதவி ...

 பச்சை அக்ரூட் பருப்புகள் அல்லது எந்த ஒரு விதைகளிலும் உள்ள டானின்கள் , ஊட்டச்சத்து எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. மேலும் இது இரும்பு போன்ற சில ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கவும் உதவுகிறது.

இந்த அக்ரூட் பருப்புகளை ஊற வைப்பதன் மூலம் அதன் சருமத்தில் இருக்கும் அழுக்கு, தூசி மற்றும் எச்சங்களை நீக்க உதவுகிறது. அக்ரூட் பருப்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், எலாஜிக் அமிலம், ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் ஈ, மெலடோனின், டோகோபெரோல், செலினியம் மற்றும் அந்தோசயின்கள் போன்றவை நிரம்பியுள்ளதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள கலவைகள் நீரிழிவு நோயைக் குறைக்க அல்லது நீரிழிவு நோயாளிகளில் குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க நமக்கு உதவுகிறது.  . . ஊறவைத்து நறுக்கிய அக்ரூட் பருப்புகளையும் ஒரு பழ சாலட்டில் சேர்க்கலாம். ஊறவைத்த மற்றும் உலர்ந்த அக்ரூட் பருப்புகளை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வருவோருக்கு பல நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது .எதற்கெடுத்தாலும் வைட்டமின் மாத்திரை  சாப்பிடாமல் இப்படி இயற்கையான பொருளிலிருந்து கிடைக்கும் சத்துக்களை பெறலாம்