ஏலக்காயை வெறும் வாயில் மென்றால் எந்த நோயை வென்று காமிக்கலாம் தெரியுமா ?

 
stomach

சைவம் அசைவம் என்று அணைத்து சமையலிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள்தான் ஏலக்காய் .இதன் நன்மைகள் ஏராளம் .இரவு தூங்க போவதற்கு முன்பு 3 ஏலக்காயை மென்று தின்று தண்ணீர் குடித்தால் பல நோய்களை வெல்லலாம் ,குறிப்பாக மலசிக்கல் ,தூக்கமின்மை,குறட்டை ,அஜீரணம் ,இதய பிரச்சினை போன்ற பல பிரச்சனைகளை வெல்லலாம் .

yelakkai

 

பலருக்கு உடலின் வெளியேயும் ,உள்ளேயும் வலி ஏற்படும் .உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் காயங்கள் காரணமாகவும், உடலுக்குள் எந்த ஒரு பகுதியிலிருக்கும் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளில் ஏற்படும் தொய்வு அல்லது பாதிப்பு ஏற்படும் போதும் தாங்க முடியாத அளவிற்கு வலி ஏற்படுகிறது. இப்படியான சமயங்களில் ஓன்றிரண்டு ஏலக்காய்களை வாயில் போட்டு மென்று சாப்பிடும் போது அதிலிருந்து வெளிப்படும் வேதிப்பொருட்கள் உடனடியாக மூளைக்கு சென்று அதிகமாக வலி ஏற்படும் நிலையை குறைக்கிறது. மேலும் ஏலக்காய் எண்ணெயை உடலில் பூசி வந்தால் வலி குறையும் .

 

இன்றைய கால கட்டத்தில் சர்க்கரை நோயால் பலர் பீடிக்கப்பட்டுள்ளனர் .நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி பாதிப்பு கொண்டவர்கள் தங்கள் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அவர்கள் தாங்கள் குடிக்கும் தேநீரில் சுகருடன் ஏலக்காயையும் பொடி செய்து சேர்த்து கொண்டால் சுகர் கட்டுக்குள் இருக்கும்