ஒரு ஏலக்காயில் ஒளிந்திருக்கும் ஓறாயிரம் நன்மைகள்

 
stomach

பொதுவாக ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது ,அந்த ஏலக்காய் மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.சிலருக்கு அடிக்கடி அஜீரண கோளாறு ஏற்படும் .அவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் அஜீரணம் நீங்கி நல்ல பசி எடுக்கும்.

yelakkai

2.சிலருக்கு சளி கட்டி கொள்ளும் .அப்படி நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட அவஸ்தைப்படுபவர்களுக்கு ஏலக்காய் நல்லது 

3.சிலருக்கு தொடர் இருமல் இருக்கும் .இப்படி சளியால் இருமல் வந்து தொடர்ந்து  இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும்.

4.இந்த இருமல் உள்ளோர் ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே தொடர் இருமல் குறையும்.

5.சிலருக்கு வாய் துர் நாற்றம் இருக்கும் .அப்படி வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் முக்கிய காரணமாக அமைகிறது.

6.எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஒரு ஏலக்காயை தினமும் வாயில் போட்டு மென்றால் போதும் .

7.சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது குடலுக்கு நல்லது 

8.சிலருக்கு நரம்பு பிரச்சினை இருக்கும் .இப்படி உள்ளோர் ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும்,

9.சிலருக்கு கண் கோளாறு இருக்கும் .அப்படி உள்ளோருக்கு ஏலக்காய் மூலம் கண் பார்வை அதிகரிக்கும்.

10.சிலருக்கு வாந்தி எடுத்து கொண்டேயிருப்பர் .அவர்கள் ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் அடிக்கடி ஏற்படும் வாந்தி நிற்கும்