ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா ?

 
honey

பொதுவாக நாம் சமையலில் சேர்க்கும் ஏலக்காய் நல்ல நறுமணம் மிக்கது .ஆனால் அதில் நறுமணம் மட்டுமில்லை அது நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்க கூடியது எனலாம் .அதை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது .மேலும் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது இந்த ஏலக்காய் டீ குடித்தால் அது அவரின் அந்த மன அழுத்தத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது ,இந்த ஏலக்காய் ஒருவர் மூச்சு திணறலால் பாதிக்கப்படும்போது அதை குணமாக்குகிறது .மேலும் மூக்கடைப்பு முதல் மூச்சு திணறல் ,இருமல் ஆஸ்த்மா போன்ற நோய்களை குணமாக்கும் ,மேலும் விக்கல் ,வயிற்று வலி போன்ற பிரச்சினைகளையும் குணமாக்கும் .மேலும் கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் அஜீரணம் ,குமட்டல் ,வாந்தி போன்ற பிரச்சினைகளையும் அந்த ஏலக்காய் குணமாக்கும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

yelakkai

1.சிலருக்கு நரம்பு பிரச்சினை மற்றும் கண் கோளாறு இருக்கும் .அவர்கள் ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரித்து நமக்கு நலன் சேர்க்கும் .

2.சிலருக்கு மன நல பாதிப்பு இருக்கும் .அந்த  மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு.

3.சிலர் கேன்சர் பாதிப்பு வருமோ என்ற பயமிருக்கும் .இயற்கையாகவே ஏலக்காய் புற்று நோய் எதிர்ப்பு தன்மை கொண்டுள்ளதால் அதை சேர்த்து கொள்ளலாம் .

4.விலங்குகளில் நடத்தப்பட்ட வெளிநாட்டு ஆய்வின் படி ஏலக்காய் புற்று நோய் வராமல் தடுக்கவும், தள்ளிப் போடவும், புற்று நோய் உருவாகாமல் தடுக்கவும் செய்கிறது.