குளிர்காலத்தில் வரும் பக்கவாதத்தில் சிக்காமல் தடுக்கும் இந்த அசைவம்

 
fish

மீனானது மிகவும் தரம் வாய்ந்த உயர் நிலை புரதம் கொண்டுள்ளது மற்றும் அவற்றில் அநேக உயிர்ச்சத்துகளும் தாது உப்புக்களும் காணப்படுகின்றன என இடைநிலை தொழிற்நுட்ப வெளியீட்டுக் கழகம் 1992 இல் எழுதியது. இவைகள் வெள்ளை மீன்கள், எண்ணெய் மீன்கள் அல்லது ஓட்டுடலிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் வெள்ளை மீன் எடுத்துக் காட்டாக பன்னா மற்றும் வஞ்சீரம் மீன்களில் மிகக் குறைந்த அளவே கொழுப்புச் சத்து காணப்படுகிறது (பொதுவாக 1% ற்கும் குறைவு). எண்ணெய் மீன்கள் எடுத்துக்காட்டாக சாளை அல்லது மத்தி மீன்கள் 10 – 25% கொழுப்புச் சத்து உடையவை. ஆனால் ஓட்டுடலிகள் அவைகளில் உள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்துக் காரணமாக கொழுப்பில் கரையும் விட்டமின்களை (ஏ,டி,ஈ மற்றும் கே) கொணட்தாகக் காணப் படுகிறது. மேலும் முக்கிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் உடையதாக்க் காணப் படுகிறது. இவைகள் அனைத்தும் மனித உடலின் உடலியக்கச் செயல் பாடுகளுக்கு மிகவும் அவசியமானதாகும்.

மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் முக்கியமாக கடற்பரப்புகளில் வாழும் மீன்களில் காணப்படும் அதிக ஆரோக்கிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருப்பதாக கண்டறியப்பட்டது. அது மட்டுமல்ல இவைகள் மனித இதயத்திற்கு நல்லது என்றும் மூளை வளர்ச்சிக்கும் இன பெருக்கத்திற்கும் இது அதிக உதவியாகக் காணப்படுகிறது என்றும் அறியப்பட்டது. இந்த ஆராய்ச்சி மனித வாழ்க்கைக்கு மீன் எவ்வளவு முக்கிய காரணமாக உள்ளது என்பதை அடிக்கோடிட்டு காட்டியது.

குளிர்காலங்களில் மீன் (Fish) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

மீன் சாப்பிடுவதன் நன்மைகள் (Uses of Fish)

அதிக அளவிலான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீனில் நிறைந்துள்ளன. குளிர்காலங்களில் மீன் சாப்பிட்டு வருவதால் நுரையீரலின் மூச்சு குழாய் பாதையில் காற்றோட்டத்தை அதிகப்படுத்தும். இதனால் நுரையீரல் பகுதியில் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். எனவே உங்களுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலை தடுக்கும்.

குளிர்காலத்தில் மீன் சாப்பிடுவதால் தோலின் நலனிற்கு நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மீனில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் தோலின் மேற்பகுதியை வறண்டு போகாமல் வைக்கும். இதனால் தோல் எப்போதும் பொலிவாக இருக்க இது உதவும்.

பக்கவாதத்திற்கும் குளிர்காலத்திற்கும் அதிக தொடர்புண்டு. ஆம், குளிர் காலங்களில் பக்கவாத பாதிப்பு வருவதால் மிகவும் சிரமம்பட கூடும். எனவே இதில் இருந்து உங்களை காக்க, மீன் சாப்பிட்டு வந்தால் போதும். இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உண்டாகும் வீக்கத்தை குறைக்கும்.

மீனில் அதிக அளவிலான நல்ல கொழுப்புகள் உள்ளன. எனவே மீன் சாப்பிட்டு வருவதால் மூளைக்கும், கண்களுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தை தரும். மேலும் மீன் உணவுகள் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.

மீனில் நிறைவுற்ற கொழுப்பு இல்லாததால், இதை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. கண் மற்றும் மூளைக்கு மட்டுமன்றி மீன் சாப்பிடுவதால் இதயத்திற்கும் நல்லது. எனவே வாரம் ஒரு முறை மீன் சாப்பிட்டால் இதய நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கலாம்.

 

உடலுக்கு மற்ற ஊட்டச்சத்துக்களை விடவும் வைட்டமின் டி மிக முக்கியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மீனில் வைட்டமின் டி (Vitamin D) மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே மீன் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்து கொண்டு ஆரோக்கியமாக வைக்கும்