என்னது !வெள்ளை சர்க்கரையால் நம் உடலுக்கு இவ்ளோ தொல்லையா ?

வெள்ளை சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஒரு சத்தும் கிடைப்பதில்லை .அதற்கு பதிலாக உடலுக்கு பல தொல்லைகள்தான் உண்டாகிறது .
பல பாதிப்புகளை தரும் வெள்ளை சர்க்கரையை அதிகமாக எடுக்கும்போது உடல் பருமன், நீரிழிவு, இதய நோய்கள்,கண் பார்வை பாதிப்பு மற்றும் பல் சிதைவு உள்ளிட்ட பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
தற்போது வெள்ளை சர்க்கரையை ஒரு மாதம் சாப்பிடுவதை நிறுத்தினால் உடம்பில் என்ன எல்லாம் நடக்கும் என்பதை பார்ப்போம்.
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம் சரும சுருக்கங்கள் போன்ற சருமம் சார்ந்த பாதிப்புகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.
சர்க்கரை குறைப்பானது உடலில் குளுக்கோஸ், டோபமைன் மற்றும் செரோடோனின் அளவை சரி செய்கிறது. இதனால் உங்கள் ஆற்றல் மேம்படத் தொடங்கி உடலானது சுறுசுறுப்பாக இருக்கும்.
சர்க்கரை உணவுகளை குறைப்பதன் மூலம் தூக்க பிரச்சினைகள் சரி செய்யப்படும்
உங்கள் உணவில் இருந்து சர்க்கரையைத் தவிர்ப்பது எடை குறைய வழி செய்யும்
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் உயர் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பதாலும் இன்சுலினை பாதிக்க செய்யும் என்பதாலும் அதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்ப்பது நலம் .