டை அடிச்சி அடிச்சி டயர்டானவர்களின் நரையை மறைய செய்யும் முறையான வழி .

 
dye

இன்றைய காலத்தில் பல இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாக இளநரை உள்ளது. இது பரம்பரை சம்பந்தமானது. ரத்த உறவினர்களில் பலர் ஏற்கனவே நரைத்தவர்கள் இருந்தால் வாரிசாக ஏற்படும்.

இயற்கை தருவதை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டும் என்பது சரும பராமரிப்பு மருத்துவர்களின் கருத்தும் ஆரோக்கியமான அறிவுரையும். எப்போதாவது என்றால் பரவாயில்லை. ஆனால் ஒரு இளநரை தென்பட்டாலும் உடனடியாக டை அடிப்பதும், குறுகிய காலத்துக்குள் மீண்டும் மீண்டும் டை அடிப்பதும் உடலுக்கு கண்டிப்பாக கேடுதரும்.

முன்பு ஹேர் டை என்று சொல்லிவந்ததைத் தான் இப்போது கலரிங் என்று சொல்கிறோம். இரண்டுக்கும் அதிகப்படியான வித்தியாசம் இல்லை என்கிறார்கள் அழகு கலை நிபுணர்கள்.

கெமிக்கல் கலந்த டையை உபயோகிப்பது இல்லை. இயற்கை பொருள்கள் நிறைந்த ஹேர் டை தான் பயன்படுத்துகிறோம் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் இந்த இயற்கை பொருளிலும் கேடுதரும் கெமிக்கல்கள் கலந்திருக்கின்றன.


கலரிங்கை பொறுத்தவரை அவை நீண்ட நாட்கள் பயன்படுத்தும் வகையில் செய்யப்படுகிறது என்பதால் ஆரோக்கியம் தரும் வகையில் அதிக கவனமும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இதை வீட்டில் எல்லோருமே போட்டுகொள்ள முடியாது. ஆனால் ஹேர் டை அப்படியல்ல. எல்லோரும் சுயமாக அவர்களே பயன்படுத்த முடியும்.

தலைமுடி வேகமாக வளர்கின்ற காரணத்தால் அதுவே முதலில் நரைக்க தொடங்கும். இதற்காக பலர் கண்ட கண்ட செயற்கை டைகளை வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள்.

உண்மையில் இதனை ஆரம்பத்திலே ஒரு சில பொருட்களை கொண்டு மறைக்க செய்ய முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.    

டிப்ஸ் 1

பிளாக் டீயை காய்ச்சி அதனுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கரு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும். இப்போது ஒரு டீஸ்பூன் காபி தூள், ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடரை இதனுடன் சேர்க்கவும்.

இந்த கலவையை நன்கு கலந்து இரவு முழுவதும் வைத்து, மறுநாள் காலையில் முடியில் தடவவும். சுமார் 2 மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு உங்கள் ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசலாம். உங்களுக்கு முட்டை பயன்படுத்த விருப்பம் இல்லை என்றால் அதற்கு பதிலாக தயிர் சேர்த்து கொள்ளலாம்.

 

இதனால் உங்கள் முடியில் உள்ள வெள்ளை நிறம் மறைந்து கருமையாகிவிடும்.

டிப்ஸ் 2

ஒரு கைப்பிடி மருதாணி இலை, இரண்டு நெல்லிக்காய், காபிக் கொட்டை - 4 ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக அரைத்து இரவு முழுக்க ஊறவிடவும்.

காலையில் இந்த விழுதை முடியில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, லேசாக சூடான நீரில் கூந்தலை அலசவும். உங்கள் முடி கருமை நிறம் பெறுவதை கண்கூடாக காண முடியும்.

டிப்ஸ்  3

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி டீ தூள் போட்டு நன்றாக கொதிக்க விட்டு இந்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு பவுலில் நெல்லிக்காய் பொடி, அவுரி பொடி, மருதாணி பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதில் தயிர் மற்றும் தனியாக எடுத்து வைத்துள்ள டீ டிகாஷனையும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை அப்படியே 1-2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அடுத்த நாள் இதனை உங்கள் முடியில் அப்ளை செய்து குளித்தால் இயற்கையான கருமை நிறம் கிடைக்கும்.

அழகு பராமரிப்பில் செயற்கையை விட இயற்கை நிரந்தரமானது பலன் தரக்கூடியது என்னும் போது அதை பயன்படுத்துவதே நல்லது. அப்படிதான் ஹேர் டை பயன்பாடும் தவிர்க்க முடியாத நேரத்தில் இதை பயன்படுத்துவது நல்லது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைபயன்படுத்துங்கள். ஆனால் முடியின் கருப்பை நிரந்தரமாக மாற்ற ஹேர் டையை கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். நிரந்தரமாக முடி கருப்பாக மாறும்.