சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்கு என்ன காரணம் தெரியுமா ?

 
hair dye side effects hair dye side effects

பொதுவாக இன்று பலரும் இள வயதிலேயே முடி நரைப்பதால் ஹேர் டை உபயோகிக்க ஆரம்பித்து விடுகின்றனர் .
ஆனால் தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். இந்த ஹேர் டை மூலம் வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.இந்த ரசாயனம் கலந்த ஹேர் டை மூலம் நமக்கு உண்டாகும் பக்க விளைவு பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் 
. 1.சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும் மற்றொரு காரணமாக உள்ளது.
2.சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம். 
3.தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற ஹேர்டையைப் பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.
4.தொடர்ந்து டை அடிப்பதால், சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும். 
5.மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், சருமத்தில் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 
6.தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலந்து , சுவாசத்தில் தடை, பார்வை குறைபாடு, வயிற்று வலி, வாந்தி, பேச்சில் உளறல் போன்றவை தோன்றும்.
7.பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் டை அடிப்பதை தவிர்க்கவேண்டும். 8.“தலைமுடி சாயம்” உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதைனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். 
9.ஹேர் டை உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அலர்ஜியில் ஆரம்பித்து, ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம். 
10.எனவே இயற்கை முறையிலான டை வகைகளை பயன்படுத்தி நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்வது நன்மை பயக்கும்.