இள நரையை விரட்டியடிக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா ?
பொதுவாக இளைய தலைமுறையை வாட்டி வதக்கும் நோய்களில் உடல் பருமனுக்கு அடுத்த படியாக இருப்பது முடி உதிர்வும் ,இள நரையும்தான் .இதில் நாம் இள நரையை தடுக்கும் முறைகளை பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்
1.சிலர் அதிகம் ஸ்ட்ரெஸ்ஸுடன் இருப்பர் .இப்படி மனஅழுத்தம் அதிகமாக இருந்தாலோ இளநரை வருவதற்காக காரணமாக இருக்கும் .
2.இந்த இள நரையை தடுக்க கீரை சேர்த்து கொள்ளலாம் .இந்த கீரைகளில் நிறைய ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.
3.கீரை வகையில் பாலக்கீரை, வெந்தயக் கீரை, சேர்த்து கொண்டால் இள நரையை தடுக்கலாம் ,
4.இள நரையை தடுக்க கொண்டக்கடலை, பீன்ஸ் மற்றும் பழவகைகளை தினசரி சாப்பிட்டு வந்தால் இளநரையை அதிகம் வளராது
5. பெண்களின் கூந்தலில் இளநரை வராமல் தடுக்க, முட்டையின் மஞ்சள் கரு, பால் உற்பத்தி பொருட்கள்,சேர்த்து கொள்வது நலம் சேர்க்கும்
6.இள நரையை தடுக்க விட்டமின் பி12 சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரலாம்.
7.இளநரையை கட்டுப்படுத்த, பரங்கி விதைகள், சூரியகாந்தி விதைகள், தர்பூசணி, சேர்த்து கொண்டால் தடுக்கலாம்
8.இள நரையை தடுக்க பாதாம், உளுந்து, எள்ளு சேர்த்து கொள்வது நலம் .இவை போன்றவற்றில் ஜிங்க் சக்தி அதிகமாக இருக்கிறது.
9.இள நரையை தடுக்க பாதாம், மீன்கள், முந்திரி, கோதுமை சேர்க்கலாம் இவை போன்றவற்றில் காப்பர் சத்து அதிகமாக உள்ளது.

