நரை முடியை கருமையாக்கும் உருளை கிழங்கு வைத்தியம்

 
hair fall

 

பொதுவாக நமக்கு வயது கூட கூட தலை முடி நரைத்து கொண்டே போகும் .ஆனால் பலர் தலை முடி நரைப்பதை விரும்ப மாட்டார்கள் .அதனால் முடியை கருமையாக்க செயற்கை டை போன்றவற்றை பயன்படுத்துவர் .ஆனால் இயற்கையாக உருளை கிழங்கு மூலம் தலை முடியை கருமையாக்கும் ஒரு வழி பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

hair dye side effects

 

1.முதலில் 50 மில்லி உருளைக்கிழங்கு சாறுடன்  10 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 5 மில்லி ஆலிவ் எண்ணெய் கலந்து கொள்ள வேண்டும் .

2.இந்த கலவை கலந்த சாற்றை நரைத்த  தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி விடுங்கள் ,

3.பின்னர் 15 நிமிடங்களுக்கு  தலையை  துண்டு எடுத்து போர்த்தி விடுங்கள்.

4.அதன் பின்னர், நரைத்த முடியை ஷாம்பு கொண்டு அலசவும் ,இது போல் அடிக்கடி செய்ய முடி கருமையாகும்

5.அடுத்து 50 மில்லி உருளைக்கிழங்கு சாற்றில், 9 மில்லி கற்றாழை ஜெல் சேர்த்து எடுத்து கொள்ளவும் 

6.அந்த இரு பொருட்களைக் கலந்து, உங்கள்  தலைமுடி முழுவதும் தடவவும்.

7.பின்னர் 15 நிமிடங்கள் கழித்து கலவை கலந்த நரைத்த முடியை நன்கு அலச வேண்டும்.இப்படி அடிக்கடி செய்ய தலைமுடி கருமையாகும்

8.அடுத்து நடுத்தர அளவிலான  உருளைக்கிழங்கை நன்றாக அரைக்கவும்.

9. அந்த அரைத்த உருளைக்கிழங்கிலிருந்து ஒரு துணியில் சாற்றை பிழிந்து ,அந்த சாறை தலையில் தடவவும் 

10.சிறிது நேரம் கழித்து உங்கள் முடியை அலசினால், தலை முடி கருமையாக மாறும் .