குளிர்காலத்தில் வரும் மூச்சு திணறலை விரட்ட இத்தனை வழிகளா ?

 
cold

.

நுரையீரல் பகுதியில் ஏற்படும் சில தொற்று மற்றும் அலேர்ஜியால் இந்த ஆஸ்த்மா எனப்படும் மூச்சிறைப்பு உண்டாகிறது .இது சிலருக்கு பரம்பரையாகவும் ,சிலருக்கு குழந்தை பருவத்திலும் ,இன்னும் சிலருக்கு நடுத்தர வயதிலும் உண்டாகிறது இதற்கு அலர்ஜி மட்டும் காரணமில்லை ,பயம் ,கோபம் ,அதிர்ச்சி போன்ற மன நல பிரச்சினைகளும் காரணம் என்று கூறலாம் .சிலருக்கு பூக்களில் உள்ள மகரந்த தூள் மற்றும் சில சுற்று புற சூழல் ,தூசி ,மற்றும் சில ஒவ்வாமையால் இந்த பிரச்சினை உண்டாகிறது .எனவே சுற்றுச்சூழல் மற்றும் உணர்ச்சிநிலை காரணங்களால் உடலில் உள்ள சுவாச குழாய்கள் சுருங்கி இந்த மூச்சிரைப்பு உண்டாகிறது .இதை சில வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்தலாம் .அவைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

asthma

1. வெள்ளைப் பூண்டை நசுக்கி அதன் சாற்றை மூக்கில் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தால் மூச்சிரைப்பு மட்டுப்படும்.

2.மூச்சிரைப்புக்கு ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் தண்ணீரில் விட்டு, அதில் திப்பிலிப் பொடி சேர்த்துக் கொடுக்க, மூச்சிரைப்பு நீங்கும்.

3.மூச்சிரைப்புக்கு தூதுவளை கீரையை காயவைத்து தூளாக்கி அரை தேக்கரண்டி எடுத்து தினம் ஒரு வேளை சாப்பிட மூச்சிரைப்பு, சளி தொல்லை நீங்கும்.

4.மூச்சிரைப்புக்கு இஞ்சி துண்டுகள் சிலவற்றை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீருடன் சிறிது தேன் கலந்து சூடாக அருந்தினால் மூச்சிரைப்பு குறையும்.

5.மூச்சிரைப்புக்கு ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை கொதிக்க வைத்து வடிகட்டிய பிறகு தினமும் ஒன்று அல்லது இரண்டு கப்புகள்  குடித்து வர வேண்டும்.

6.மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா செய்வது மூச்சிரைப்பு பிரச்சனைக்கு மிகவும் நல்ல தீர்வாக அமைகிறது.