வின்டர் சீசன் வந்தாலே வரும் வீசிங் தொல்லையை விரட்டும் முரட்டு வழிகள்

 
asthma

சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் உடனே தெரிவதில்லை.

மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதே தெரிய வரும்.

காற்றோட்டமான இடத்தில் சளி உருவாகும் போது மூச்சுத்திணறலும் உண்டாகும். அப்போது சூடான திரவங்கள் குடிப்படன் மூலம் இது மூச்சுவிடுதலை எளிதாக்கும். இது சளியை உடைக்க மற்றும் காற்றுப்பாதையில் அடைப்பை தடுக்க உதவும்.

வெதுவெதுப்பான நீர் அல்லது மூலிகை தேநீர் குடிப்பதன் மூலம் மூச்சுத்திணறலை கட்டுபடுத்தலாம்.

​தேன்


தேன் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் ஆகும். வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து நன்றாக கலக்கி குடிப்பது அறிகுறிகளை குறைக்க செய்யும். இது தொற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. இருமல் மற்றும் மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.

நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும். எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லது.

இதற்கு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

மூலிகை தேநீர் அல்லது வெதுவெதுப்பான நீர் மற்றும் எலுமிச்சையுடன் 2 டீஸ்பூன் தேனை கலந்து உட்கொள்வதன் மூலம் இருமலுக்கான சொந்த தீர்வை வீட்டிலேயே தயார் செய்யலாம்.

புதினாவில் உள்ள மெந்தால் சளியை நீக்க உதவுகிறது. புதினா தேநீர் குடிப்பதன் மூலம் அல்லது புதினா நீராவியை உட்கொள்வதன் மூலம் பயனடையலாம்.

இஞ்சி வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா இருமலைக் குறைக்க உதவுகிறது. சளி அல்லது கபத்தை உருவாக்கும் இருமலில் இருந்து விடுபட நீராவியை எடுத்துக்கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கி குடிப்பதுடன் கொதிக்கும் நீரில் 2 மேசை கரண்டி சுக்கு தூளுடன் 1/4 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு, 1 மேசை கரண்டி தேன் கலந்து பருகினால் நன்று.

நெஞ்சு சளியை உடனே தீர தினமும் 2 மேசை கரண்டி இஞ்சி சாற்றில் 2 மேசை கரண்டி தேன் கலந்து தினமும் 3 வேளை உண்ண வேண்டும்.

தொண்டை புண் மற்றும் ஈரமான இருமலுக்கு சிகிச்சையளிக்க உப்பு நீர் கொண்டு வாய் கொப்புளிக்கவும். ஏனெனில் உப்பு நீர் தொண்டையின் பின்புறத்தில் உள்ள கபம் மற்றும் சளியைக் குறைக்கிறது மற்றும் இருமலைப் போக்குகிறது.  

சூடான அல்லது ஈரப்பதம் நிறைந்த காற்றை உள்ளிழுப்பது சைனஸை அழிக்க செய்யும். காற்றுப்பைகளை திறக்க உதவும்.

அகன்ற கிண்ணத்தில் நீரை ஊற்றி தலைக்கு மேல் துணியை போர்த்தி நீராவியை இழுக்கவும். நீரில் புதினா அல்லது துளசி இலைகள் ஆவி பிடிப்பதன் மூலம் பலன் வேகமாக கிடைக்கும். புதினா எண்ணெய் வலி நிவாரணம் மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை உண்டாக்கும் என்று கண்டறிந்துள்ளது.