எடையை குறைக்க தவிர்க்க வேண்டிய எட்டு உணவுகள்

 
weight

உடல் எடையினை குறைக்க பலர் டயட்டில் இருக்கின்றனர் .சிலர் ஒரு வேலை உணவை சாப்பிடாமல் ஸ்கிப் செய்கின்றனர் .இன்னும் சிலரோ இருவேளை சாப்பிடாமல் இருக்கின்றனர் .இன்னும் சிலர் பச்சை காய்கறி அல்லது வெறும் பழங்களை மட்டும் உண்கின்றனர் .இப்படி டயட்டில் இருப்போர் நாளடைவில் விரக்தியாகி பழையபடி அதிகமாக உன்ன ஆரம்பித்து எடை கூடி விடுகின்றனர் .எனவே உடல் எடை குறைக்க இந்த எட்டு உணவுகளில் விடுத்து நீங்கள் வழக்கம் போல் மற்ற உணவுகளை உண்டால் எடை கூடாமல் தவிர்க்கலாம் 

Weight Loss

.

1.எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ்.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு உடல் எடை கூட்டி விடுகிறது

2.சர்க்கரை பானங்கள்.

அதிகமான சர்க்கரை கலந்துள்ள பானங்கள் மற்றும் சோடா போன்றவை எடை கூடும் உணவுகள் அதனால்  இதை நீங்கள் தவிர்க்க வேண்டும்

3.வெள்ளை ரொட்டி.

வெள்ளை ரொட்டி பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் இதில் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது.அதனால் எடை கூடாமலிருக்க இதை தவிருங்கள்

4. சாக்லேட்கள்.

மிட்டாய் வகைகள் மிகவும் ஆரோக்கியமற்ற வகைகளில் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும்  எண்ணெய் வகைகளில் தொகுப்பாக மிட்டாய் உள்ளது.அதனால் இதையும் தவிர்க்க வேண்டும்

5. பழச்சாறுகள்.

எடை கூடாமலிருக்க சூப்பர் மார்க்கெட்டில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பழச்சாறுகளை தவிர்க்கலாம் .இவை பெரும்பாலும் பதப்படுத்தப்பட்டவை அவைகளில் அதிக அளவில் சர்க்கரை மற்றும் கெடாமல் இருப்பதற்கு பல்வேறு வகையான செயற்கையான பானங்கள் சேர்க்கப்படுகிறது..

6.பேக்கரி உணவுகள்.

உங்கள் உடம்பில் சூடு அதிகமாக இருந்தால் பேக்கரி உணவுகளை எடுத்துக் கொள்ளத் தோன்றும் மேலும் இந்த உணவுகள் சுத்திகரிக்கப்பட்ட மாவுகளில்  இருந்து தயாரிக்கப்படுவதால் இவையும் எடை கூட்டும் உணவு

7.அதிக அளவில் ஆல்கஹால் குறிப்பாக (பீர்).

மிதமான அளவில் மது அருந்துவது உண்மையில் நன்மையை ஏற்படுத்தும் ஆனால் அதிகஅளவில் எடுத்துக்கொண்டால் அதற்கு நீங்கள் அடிமையாகி விடுவீர்கள் மேலும் உடல் எடை கூடுவதற்கு மது வழி வகுக்கும்

8.ஐஸ் கிரீம் வகைகள்.

ஐஸ்கிரீம் வகைகள் நம் எடையை கூட்டுவதால் இதை தவிருங்கள்