ஒரே வாரத்தில் எடை குறைக்க உதவும் 'முட்டை அட்டவணை திட்டம் "

 
egg

போதிய எக்சர்சைஸ் செய்யாததாலும் ,அதிக கொழுப்பு உள்ள உணவுகளை உண்பதாலும் உடல் எடை கூடுகிறது .எனவே உடல் எடை குறைக்க புரதம் மிக உதவி புரிகிறது .எனவே புரத சத்து அதிகம் உள்ள முட்டை மூலம் உடல் எடை குறைக்கும் திட்டத்தை பற்றி நாம் இதில் பார்க்கலாம் .மேலும் புரதங்கள் உள்ள உணவு முறையில் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்க முடியும். அந்தவகையில், உடல் எடையைக் குறைப்பதில் புரோட்டின் எனப் படும் புரதம் உள்ள உணவுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இது  ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

egg

எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தங்களுடைய டயட்டில் முதலில் சேர்த்துக் கொள்வது இந்த முட்டையை தான்.

இதனை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு சேர்த்து கொள்வது நன்மையே தான் தரும்.

அந்தவகையில் இதனை டயட் திட்டத்தில் கீழ்வரும் வகையில் முட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.

டயட் திட்டம்

காலை - க்ரில் செய்த தக்காளி, 2 பிரட் துண்டு டோஸ்ட் செய்தது, ஒன்றோ அல்லது இரண்டோ  முட்டை ஆம்லெட்,

மதியம் - ஃபிரட் பழங்கள் கொண்ட சாலட் (நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சிறந்தது)

இரவு - 2 முட்டை, ஒரு ஆரஞ்சு பழம்

மேற்சொன்ன முட்டை அட்டவணை திட்டத்தை பயன்படுத்தி எடை குறைத்து பயன் பெறலாம்