காலையில் எதை சாப்பிட்டால் எடை குறையும்னு தெரிஞ்சிக்கோங்க
Oct 5, 2022, 04:00 IST1664922610000
இலவங்க பட்டையில் நிறைய மருத்துவ குணங்களும் மனிதனின் எடை குறைக்கும் தன்மையும் அடங்கியுள்ளது. ஒருவர் தினம் 1/2 தேக்கரண்டி பட்டை பொடி சாப்பிட்டால், அது கொழுப்பைக் கட்டுப் படுத்தும்.மேலும் இது ஒருவரின் ரத்த சர்க்கரை முதல் கொழுப்பு வரை குறைக்கும் ஆற்றல் உள்ளது .

கலோரிகள் இல்லாமல் உணவில் இனிப்பு சுவையை சேர்க்கும் தன்மைக் கொண்டது இலவங்கப் பட்டை.
தானிய உணவுகள், ஓட்ஸ் மீல்ஸ், ஏன் காபியில் கூட கொஞ்சம் இலவங்கப் பட்டை தூவி உட்கொள்வது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடலில் சர்க்கரை மூலம் சேரும் கலோரிகளை குறைக்கவும் பயனளிக்கிறது.
இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை குறைக்க முடியும்.
தினம் காலை 1/2 தேக்கரண்டி பட்டை பொடி + 1தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் , அது நாள்பட்ட மூட்டு வலியை கூட நன்கு குணப்படுத்துமாம்
மேலும் இது மன அழுத்தம் முதல் மன இறுக்கம் வரை குணப்படுத்தி விடும் .மேலும் இதில உள்ள சில பொருட்கள் நாள் பட்ட வயிற்று வலி ,வயிற்று பொருமல் போன்ற அனைத்து விதமான வயிறு தொல்லைகளையும் குணப்படுத்துகிறது

