"குறைவா சாப்பிட்டாலும் உடல் எடை குறைய மாட்டேங்குதே "ன்னு கவலை படுறவங்களுக்கு சில டிப்ஸ்

 
Tips to Lose Weight

உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கஷ்டப்படுவதை நாம் காண முடிகிறது. இதனால் பல்வேறு டயட் முறைகளை பின்பற்றி எடை இழப்பு செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் உடல் எடையை குறைப்பது எளிதல்ல. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது என்ன சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். டயட் இருக்கும் போது தவறான உணவுகளை உட்கொள்வதால் பசி எடுக்கும், இதனால் உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியாத நிலை ஏற்படும். எனவே சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், பசி கட்டுக்குள் இருக்கும். இது எடை இழப்பை எளிதாக்கும்.

மாதிரிப்படம்

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், உடல் எடையை இழந்தவர்களும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க எண்ணுபவர்களும் தினமும் சில வழிகளை கடைபிடிக்க வேண்டும், அவ்வாறு செய்தால் தான் உடல் சரியான அளவில் அப்படியே இருக்கும்.  மேலும் உடல் எடையை குறைப்பது எவ்வளவு முக்கியமானதோ அதை விட முக்கியமானது மீண்டும் உடல் எடை ஏறிவிடாமல் பார்த்துக்கொள்வது.  அதனால் உடல் எடையை சரியான முறையில் பராமரிப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட மூன்று வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை சரியான அளவில் பராமரிக்கலாம்.

1) தினசரி 7000 முதல் 8000 ஸ்டெப்ஸ் நீங்கள் நடக்க வேண்டும், அவ்வாறு தினமும் நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது உங்கள் உடலில் அழகிய வடிவத்தை பெறும்.

2) உடற்பயிற்சி செய்வதை தினமும் சுழற்சி முறையில் செய்துவர வேண்டும், கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் நான்கு நாட்களுக்கு நீங்கள் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

3) மேலும் முறையான உணவுப்பழக்கத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.  தினமும் உணவில் 80% ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும், 20% உங்களுக்கு தேவைப்படும் ஜங்க் ஃபுட்ஸ்களை உண்ணலாம், இருப்பினும் கூடுமானவரை ஆரோக்கியமான உணவுகளையே உண்ணுங்கள்.