சர்க்கரைக்கு பதில் தேன்,பயன்படுத்தினால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக நாம் சரியான முறையில் சாப்பிட்டால் 80% தேவையற்ற கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். இதற்க்கு ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றிவர வேண்டும் .நாம் ஆரோக்கியமாய் ஸ்லிம்மாக இருக்க சில டிப்ஸ் கொடுத்துள்ளோம்
1.சிலர் எந்நேரமும் நொறுக்கு தீனிகள்,சாப்பிடுவர் .இப்படி துரித உணவுகளை அறவே தவிர்த்தால் உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கலாம்.
2.அதற்கு பதிலாக இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேக வைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.
3.சிலர் எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொண்டிருப்பர் .அது நல்லது . ஒருநாளைக்கு குறைந்தது 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
4.சிலர் தினமும் தவறாது உடற்பயிற்சி மேற்கொள்வர் .அது நல்லது . தினமும் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சிகென்று ஒதுக்க வேண்டும்.
5.இப்போது எல்லோரும் வெள்ளை சர்க்கரை உபயோகிக்கின்றனர் .இந்த சர்க்கரையை தவிர்ப்பது நல்லது.
6.ஏனெனில் கடைகளில் கிடைக்கும் சர்க்கரையில் சுத்திகரிப்பு என்ற பெயரில் செயற்கை ரசாயனங்களை அதிகம் உபயோகிக்கின்றனர். இதை தவிர்ப்பது நல்லது.
7.சர்க்கரைக்கு பதில் இயற்கை முறையில் கிடைக்கும் தேன்,பயன்படுத்தினால் நல்லது
8.மேலும் சர்க்கரைக்கு பதில் பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு ஆகியவற்றை பயன்படுத்தலாம்



