வெல்லம் கலந்த நீரில் எந்த சாறு சேர்த்து குடிச்சா எடை குறைக்கலாம் தெரியுமா ?

 
weight loss weight loss

பொதுவாக உடல் எடையை குறைக்க இன்று பலர் பல முறைகளை கையாள்கின்றனர் .அந்த வகையில்  
வீட்டில் இருந்துக்கொண்டே சமையலறையில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எப்படி உடல் எடையை குறைக்கலாம் இந்த பதிவின் மூலம் நாம் அறியலாம் 

1.உடல் எடையை குறைக்க டீடாக்ஸ் வாட்டர் முறை பயன் படும் .இந்த முறை  என்பது நமது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை சுத்தப்படுத்தும். 
2.இந்த டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்க விருப்பமான பழங்கள் அல்லது காய்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். 
3.பின்னர் டீடாக்ஸ் வாட்டருக்கு ஒரு போத்தலில் தண்ணீர் ஊற்றி குறைந்தது 8 மணிநேரமாவது வெட்டிய பழங்களை சேர்த்து ஊற வைத்து பின்பு குடித்தால் நல்லது.  
4.இந்த டீடாக்ஸ் வாட்டர் நமது ரத்தத்தில் கலந்து மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலுக்கு உடனடியாக ஆற்றலை தருகின்றது.
5.அடுத்து இந்த டீடாக்ஸ் வாட்டர் தயாரிக்க முதலில் வெல்லத்தையும் புளியையும் தனித்தனியே சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். 
6.இரண்டையும் ஒன்றாக சேர்த்து கலந்து, இத்துடன் சுக்குத்தூள், மஞ்சள்தூள், ஏலக்காய்த்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து கலக்கவும். 
7.பின்பு அந்த கலவையில் எலுமிச்சைச்சாறு, புதினா இலைகள் சேர்த்து குடித்தால் நல்லது. 
8.இந்த டீடாக்ஸ் வாட்டரில் சேர்க்கும் வெல்லம் மற்றும் எலுமிச்சையானது பொதுவாகவே உடல் பருமன், கொழுப்பு அதிக எடை, நீரிழிவு பிரச்சினைகளுக்கு நிவாரணியாக இருக்கும். 
9.அடுத்து வெதுவெதுப்பாக இருக்கும் வெல்லம் கலந்த நீரில் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்க்கவும். இவை இரண்டையும் நன்றாக கலந்து இதை குடித்து வர உடல் எடையானது குறைந்து விடும். 
10.அடுத்து உடல் எடையை குறைக்க வெந்தயப் பொடியை எடுத்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிடுங்கள்.