தண்ணீர் அதிகம் குடிச்சா உங்க மூளை என்னாகும் தெரியுமா ?

 
water

பொதுவாக நமக்கு ஏற்படும் ஞாபக சக்தி குறைபாடுகளுக்கு சரியான உணவு வகைகளை சாப்பிடாதது ஒரு காரணம் .அதுவும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் அவசியம் தேவை .அவர்களுக்கு படித்தது ஞாபகத்தில் இருக்க இந்த உணவுகள் தேவை .முதியோர்களுக்கு வயதாவதால் ஏற்படும் அல்ஸிமர் என்ற ஞாபக மறதி நோய் வராமல் இந்த உணவுகள் தடுக்கும் .எனவே பின் வரும் உணவுகளை அனைத்து வயதினரும் எடுத்து கொண்டு மூளை ஆரோக்கியத்தை பேணுங்கள்

water

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

எதிர்காலத்தில் ஞாபக மறதி நோய் வராமலிருக்க தண்ணீர் அவசியம் .ஏனெனில் மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் உள்ளது. இதனால் தண்ணீர் குடிக்கும் அளவு குறைந்தால் மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறையும். எனவே தினமும் போதியளவு தண்ணீர் குடிப்பது மூளையின் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஒன்று .

மூளைக்கு omega-3 சத்து மிக அவசியம். omega-3 மீன்க்ளில் அதிகம் நிறைந்துள்ளது ,எனவே அதிக அளவு மீன் சாப்பிடுவது மூளையின் ஆரோக்கியத்துக்கு அவசியமான ஒன்று ஆகும் ,மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் முட்டையிலும் அதிகம் உள்ளது .எனவே முட்டை எடுத்துக்கொள்ளலாம்

எதிர்காலத்திலும் ,நிகழ் காலத்திலும் மூளை சம்பந்தமான கோளாறு ஏற்படாமல் பூசணி விதைகள்காக்கிறது .இவை  சக்தி வாய்ந்த ஆன்டி ஒக்ஸிட் இது நம் உடம்பில் உருவாக கூடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றும்.

இந்த பூசணி விதைகள் சிந்திக்கும் திறனையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டவை என்பதால் இவற்றை அதிக அளவில் சேர்த்து வாருங்கள்