என்னது தண்ணீரை இப்படி குடிச்சா ,எப்போதும் மருந்தே குடிக்க வேணாமா ?

 
water

தண்ணீர் குடிக்கும் முறை (Methods of Drinking Water)

தண்ணீர் மனிதன் உயிர் வாழ அவசியமான ஒன்று .அதனல் தான் வள்ளுவர் கூட நீரின்றி அமையாது உலகு என்று குறளில் கூறியிருக்கிறார் .அந்த தண்ணீரை முறையாக குடித்தால் மருந்து மாத்திரை கூட எப்போதும் தேவைப்படாது .தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் .

எப்போதும் தண்ணீரை நின்று கொண்டு குடிக்க கூடாது .உட்கார்ந்த நிலையில் தான் குடிக்க வேண்டும் .மேலும் அவசரமாக மடக் மடக்கென்று குடிக்க கூடாது .நிதானமாக பொறுமையாக குடிக்க வேண்டும்

water

எப்போதும் வெதுவெதுப்பான நீர் அல்லது அறை வெப்பநிலையில் இருக்கும் தண்ணீரைக் குடிக்கவும்., பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை குடிக்க வேண்டாம். குளிர்ந்த நீர் உங்கள் செரிமான ஆற்றலைக் குறைத்து ஆரோக்கிய குறைபாடை உண்டு பண்ணி விடும்

தண்ணீரை சேமிக்க மண் பானைகள், செம்பு அல்லது ஸ்டீல் பயன்படுத்தவும். ஓடும் தண்ணீரை ஒருபோதும் குடிக்காதீர்கள். எப்போதும் சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை குடிக்கவும்.

மேம்பட்ட செரிமானத்திற்கு, கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கவும், இது மூன்றில் ஒரு பங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு அல்லது பாதி அளவு குறைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

நீங்கள் எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதை வழக்கமாக்குங்கள்.

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நினைத்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமில்லை. தண்ணீரை கூட செரிமானம் ஆன பிறகுதான் அடுத்த வேளை குடிக்க வேண்டும் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது .நீர் குறைவாக குடித்தால் மலசிக்கல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்