வெது வெதுப்பான நீரில் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்.

 
water

பொதுவாக வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதைவிட வெல்லம் சாப்பிடுவது நம் உடலுக்கு ஆரோக்கியம் தர கூடியது .இந்த வெல்லத்தில் நிறைய இரும்பு சத்துள்ளது .மேலும் நாம் உணவு உண்ட பிறகு கொஞ்சம் வெல்லம் சாப்பிட்டால் செரிமானம் ஆகும் .மேலும் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வரும் வலி மற்றும் சோர்வு போன்றவைகளுக்கு கொஞ்சம் வெல்லம் சாப்பிட குணமாகும் .மேலும் ஆஸ்துமா நோயாளிகள் அடிக்கடி வெல்லம் சாப்பிட நோய் முற்றாமல் இருக்கும் .மேலும் வெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்

vellam

1.சிலருக்கு பலவீனமான எலும்புகள் இருக்கும் .அவர்கள் வெல்லம் சாப்பிட அது  எலும்புகளை வலுவாக்கும்,

2.மூட்டு வலியால் சிலர் அவதி படுவதுண்டு ,இந்த , மூட்டுவலி போன்ற எலும்புக் கோளாறுகளைக் வெல்லம் குணப்படுத்திவிடும் .

3.சிலருக்கு  ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் ,அவர்கள் வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து குடிப்பது உடலுக்கு நல்லது.

4.வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தை தொடர்ந்து குறைந்த அளவில் உட்கொண்டால், உங்கள் சருமத்திற்கு தேவையான பளபளப்பு கிடைக்கும்.

5.சிலர் உடலில் நச்சுக்கள் சேர்ந்து தீங்கு விளைவிக்கும்.இந்த  நச்சுகள் வெல்லம் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படும்.

6.சில பெண்கள் இரத்த சோகையால் அவதிப்படுவர் .இப்படி  உள்ள பெண்களும் வெதுவெதுப்பான நீரில் வெல்லம் சாப்பிடலாம்.

7.இயற்கையாகவே வெல்லம்  கல்லீரலை சுத்தப்படுத்தி ஆரோக்கியம் பிறக்கும் .