எடையை குறைக்க கோடையில் எப்படி நடை பயிற்சி போகணும் தெரியுமா ?

 
eight walk

 

பொதுவாக நம் உடலுக்கு சிறந்த எக்சர்சைஸ் வாக்கிங் என்றால் அது மிகையாகாது .எனவே வாக்கிங் போகும்போது சில வழி முறைகளை கடைபிடித்தல் நலம் சேர்க்கும் .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

walking

 

1.சிலர் வாக்கிங் போக செருப்பு  அணிந்திருப்பர் .நடைப்பயிற்சி செய்ய  சரியான குதிகால் சப்போர்ட் உள்ள ஷூக்களை கண்டிப்பாக அணியவேண்டும் .

2.சிலர் வாக்கிங் போக இறுக்கமான உடை அணிந்திருப்பர் .நடைப்பயிற்சி செல்ல தளர்வான உடை அணிந்திருக்க வேண்டும்.

3. வாக்கிங் போகும்போது தாகம் எடுக்கும் .அதனால் நடைப்பயிற்சி செல்லும்போது ஒரு பாட்டிலில்  தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும்.

4.சிலர் வெயிலில் வாக்கிங் போவர் .பகல் வேளையில் நடைப்பயிற்சி செல்பவர் என்றால் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்

5.சிலர் வாக்கிங் போகும்போது நடை தளர்வாக நடப்பர் .ஆனால் நடைப்பயிற்சி செய்யும்போது, நேராகப் பார்த்தபடி உடலை நிமிர்த்தி நடக்க வேண்டும்,

 6.வாக்கிங் போகும்போது குதிகால்களிலிருந்து விரல்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

7. சிலருக்கு தனியாக நடக்க கஷ்டமாயிருக்கும் .அப்படி தனியாக நடக்க போரடித்தால் நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடக்கலாம்

8. நடைப்பயிற்சி செய்பவர்கள் , முதலில் 10 நிமிடங்களில் தொடங்கி, பிறகு 20 நிமிடங்கள், அடுத்து 30 நிமிடங்கள் என அதிகரித்தல் வலி உண்டாகாமல் இருக்கும் 

9.முதல்நாளே நீண்ட தூரமோ, அதிக நேரமோ நடக்க நினைக்க வேண்டாம்.

10.அப்படிச் செய்தால் களைப்பாகி விடும் .மேலும் , கால்வலியால் அடுத்தநாளே வாக்கிங் செல்ல முடியாமல் போகலாம்.