உங்களுக்கு அடிக்கடி வியர்வை வருதா ?சமாளிக்க சில வழிகள்

 
Exercise

உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது நல்லதுதான் .அது எக்ஸைஸ் அல்லது உடலுழைப்பு மூலம்தான் வெளியேற வேண்டும்

ஆனால் ஒரு சிலருக்கு உடல் வெப்பமாக இல்லாமல் இருக்கும் பொழுது கூட  அதிகளவு வியர்க்க தொடங்கும். இந்த நிலை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் என்று மருத்தவ உலகில் அழைக்கப்படுகிறது .

lemon

சிலருக்கு அவர்களின் தலை, பாதங்கள், உள்ளங்கைகள், அக்குள் போன்ற பகுதிகளில் ஏதாவது ஒன்றிரண்டு இடங்களில் இருந்து அதிகம் வியர்க்க ஆரம்பிக்கும். உங்களின் மற்ற உடல் பாகங்களில் வியர்வை ஏற்படாமல்  ஒரு சில இடங்களில் மட்டுமே அதிகம் வியர்க்க ஆரம்பிக்கும். நீங்கள் எந்த வித உடற்பயிற்சி செய்யாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது கூட இப்படி வியர்க்கும். இப்படி உங்களுக்கு வியர்க்க ஆரம்பித்தால் உங்களுடைய உடலில் நீர்ச்சத்தை சமன் செய்வதற்கு உப்பு, எலுமிச்சம் பழம் சேர்ந்த தண்ணீரை ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்

இந்த கலவை நீர்  உடலில் இருந்து அதிகப்படியான நீர்ச்சத்து வெளியேறுவதை ஈடுசெய்யும். மேலும் எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது இப்படி அதிகம் ஏதாவது ஒரு சில பகுதிகளில் இருந்து வியர்க்க ஆரம்பித்தால் உடலில் ஏற்படக்கூடிய ஒரு சில நோய் அறிகுறிகளாக கூட இருக்கலாம். இப்படிப்பட்ட வியர்வை உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சைகளை மேற்கொள்வது சிறந்தது.சரியான அளவில் உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது நம்முடைய மூளை செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது