குழந்தைகளுக்கு வெற்றிலை எப்படி உதவும் தெரியுமா ?

 
vetrilai health benefits

வெற்றிலை நம் கலாச்சாரத்தில் சிறப்பான மரியாதை பெறுகிறது .திருமணம் போன்ற அணைத்து விசேஷங்களில் இதற்கு என்று தனியிடம் உண்டு .மேலும் இதே போல் மருத்துவத்திலும் அதற்கு சிறப்பான இடம் இருக்கிறது

இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரதம் நிறைந்துள்ளது . இதில்  அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது

vetrilai

வலி நிவாரணி

சித்த மருத்துவ உலகில் வெற்றிலை சிறந்த ஒரு வலி நிவாரணியாக இருக்கிறது. சிலருக்கு உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறமாக வலி இருக்கும் .இன்னும் சிலருக்கு , அடிபடுதல் போன்றவற்றால் மிகுந்த வலி ஏற்பட்டு அவதிபடுவர் .அந்த  நேரங்களில்அவர்கள்  ஒரு முழு வெற்றிலையை சுத்தம் செய்து வாயில் போட்டு நன்கு மென்று நீரருந்தினால் சீக்கிரத்தில் வலி குறைந்து அவர்கள் முகத்தில் புன்னகை தவழும் . வெட்டு காயங்கள், சிராய்ப்புகள் வீக்கங்கள் போன்றவற்றிற்கு வெற்றிலைகளை நன்கு அரைத்து காயங்களின் மீது பற்று போட்டால் அவை சீக்கிரத்தில் குணமாகி நன்மை உண்டாகும் -

சிலருக்கு  வயிற்றில் வாயுத்தொல்லை போன்றவை ஏற்படுகிறது. மேலும் சிறு குழந்தைகள் சிலருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு, அவர்களை மிகுந்த அவதிக்குள்ளாகி நரக வேதனை அனுபவிப்பர் . இச்சமயங்களில் ஒரு சில வெற்றிலைகளை எடுத்து கொண்டு, அதில் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் காட்டி வயிற்றின் மீது வைத்து எடுத்தால்  வயிற்றில் இருக்கும் வாயு நீங்கி அவர்களின் ஆரோக்கியம் சிறக்கும் .