நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய பொருள் எது தெரியுமா ?

 
ulcer health tips

நம் தமிழ்நாட்டு சமையலில் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் எதுவென்றால் அது வெந்தயம் .இது நம் உடலுக்கு ஏரளமான நன்மைகளை வாரி வாரி வழங்குகிறது .சர்க்கரை நோய் முதல் உடல் உஷ்ணம் வரை குணமாக்கும் இதன் பலன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .வெந்தையத்த வறுத்து அதுகூட சம அளவுக்கு கோதுமை சேர்த்து பொடி செஞ்சு நீரில் கலந்து குடிச்சா உடல் உஷ்ணம் குறையும் .வெந்தயத்த அரைச்சு தலையில தேய்ச்சு குளிச்சா முடி உதிர்வு பிரச்சினை தீரும் .வெந்தயம் போலவே வெந்தய கீரையிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது

வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், உடற்சூடு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் குணமாக வெந்தயத்தை பொடியாக்கி அதை நீரில் ஊறவச்சி சாப்பிட்டால் குணமாகும்

vendhayam

1.வெந்தயத்தை சாப்பிடுவது கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்த உதவுவதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைக்கிறது. இதன் மூலம் நம் உடல் எடையை குறைக்கலாம்.

2.வெந்தயம் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ஐ ஊக்குவிப்பதற்கு உதவுகிறது. எனவே 40 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் கண்டிப்பாக வெந்தயத்தை சாப்பிடுவது நல்லது.

3.வெந்தயம் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு வெந்தயத்தை சிறிதளவு கஞ்சியில் சேர்த்து காய்ச்சிக் கொடுத்தால் பால் அதிகமாக சுரக்கும்