வெந்தயத்தை கொதிக்க வைத்து குடித்தால் நம் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா ?

பொதுவாக நாம் அன்றாடம் சமையலில் பயன் படுத்தும் பல மூலிகை பொருட்கள் நம் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் .அந்த வகையில் நாம் இந்த பதிவில் கெமோமில் தேனீர் மற்றும் வெந்தயம் மற்றும் கற்றாழை போன்ற பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் தேநீர் மூலம் நாம் பெரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்
1.மூலிகை தேநீரில் மிகவும் பிரபலமானது கெமோமில் தேநீர். கெமோமில் என்பது ஒருவகை பூவிலிருந்து பெறப்படும் மூலிகையாகும்.
2.கெமோமில் தேயிலை நம் உடலில் உள்ள இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டராலை குறைப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும்.
3.மேலும் இது, இதய பிரச்சனையை குறைப்பதற்கும் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
4.இந்த கெமோமில் தேநீரை இரவில் தூங்குவதற்கு முன்பு குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், நல்ல தூக்கத்தையும் பெறலாம்.
5.வெந்தய தேநீரை இரவில் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும்.
6.வெந்தய தேநீர் நம் உடலில் செரிமானத்தை மேம்படுத்துவதோடு கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.
7.வெந்தயத்தை கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் வெந்தய தேநீர் , நம் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கவும் உதவுகிறது.
8. கற்றாழை சாறை இரவில் குடிப்பதன் மூலம் பல நோய்களை குணப்படுத்துவதோடு உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.
9.கற்றாழை சாறை குடிப்பதன் மூலம் செரிமான பாதையில் இருந்து ஓட்டுன்னுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும், வேகமாக உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
10.அடுத்து மஞ்சள் கலந்த பாலை இரவில் உட்கொள்ளும் போது, நல்லா தூங்க முடியும்
11.மேலும் இந்த பால் நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமானத்தை ஆற்றவும் இது பயன்படுவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. நம் உடலின் செரிமானத்தையும் சீராக வைக்கும்.