"பேராண்டி ,உன் தலையில வழுக்கை விழாமலிருக்க இந்த எண்ணெயெல்லாம் தேய்க்காதே "

 
vazhukkai vazhukkai

தலைதான் நம் உடலின் தலையாய உறுப்பு. அதனால் தலையையும், அதற்கு மேல் வளரும் முடியையும் மிகவும் கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டியது முக்கியம். ஆனால், நம்முடைய நவீன உணவுப்பழக்க வழக்கம், இயந்திரமயமான வாழ்க்கை, திடீரெனத் தொற்றிக்கொள்ளும் நோய்கள் உள்ளிட்டவை நம் முடிக்கு உலை வைப்பதுடன், உடல்நலத்தையும் பந்தாடிச் சென்றுவிடுகின்றன.

 

எனவே முடிக்கு பயன்படுத்துவதில், தவிர்க்க வேண்டிய சிலப் பொருட்களும், எண்ணெய்களும் உள்ளன. இவற்றை மறந்தும் கூட பயன்படுத்திவிடக் கூடாது. தலைக்கு கவசமாக மட்டுமல்ல, அழகையும் அதிகரிக்கும் ஐந்து விதமான எண்ணெய்கள் உள்ளன. கூந்தலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிக்க ஒரு நல்ல முடி எண்ணெய் தேவை.ஆனால் சில எண்ணெய்கள் முடிக்கு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். அவ்வாறுத் தலைமுடிக்கு பயன்படுத்தக்கூடாத எண்ணெய்கள், அதேநேரத்தில் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பல்வேறு வகையான எண்ணெய்களைப் பயன்படுத்துகிறோம்.

ஆலிவ் எண்ணெய்

ஆனால் நீங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டிய பல முடி பராமரிப்பு பொருட்கள் மற்றும் எண்ணெய்கள் உள்ளன.  அந்த வரிசையில் முதலாவது ஆலிவ் எண்ணெய். ஆலிவ் எண்ணெய் முடியின் வேருக்கு நல்லது மற்றும் முடி பராமரிப்புக்கு நல்லது. ஆனால் இது தலைமுடியில் எண்ணெய் பிசுபிசுப்பை தக்க வைக்கிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஓலூரோபீன் முடி வளர்ச்சி சுழற்சியை நேரடியாக பாதிக்கிறது.

ஆலிவ் எண்ணெயில் இயற்கையாகவே உள்ள மெடோஜெனிக், தோலின் துளைகளை அடைத்து முகப்பருவை ஏற்படுத்தும். எனவே, ஒருவருக்கு முகப்பரு வரும் பழக்கம் இருந்தால், அவர் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, முடியின் அடர்த்தியை குறைப்பதுடன், முகப்பருவையும் ஏற்படுத்தும்.

விளக்கெண்ணெய்

முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவது சகஜம். ஆனால் பலருக்கு விளக்கெண்ணெய் ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் விளக்கெண்ணெய்யை தலைக்குப் போடுவதில் பல ஆபத்துகள் உள்ளன. அதிக பசைத்தன்மையைக் கொண்ட விளக்கெண்ணெய் முடியின் தன்மையை முரடாக்கிவிடும்.

நம் தலையில் 1 இலட்சத்துக்கும் மேலான முடி இருக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவில் முடி உதிர்த்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும். 

ஆனால், எப்போது ஒருவருக்கு அளவுக்கு அதிகமான அளவில் தலைமுடி உதிர்கிறதோ, அப்போதுதான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. இதைதான் "அலோப்பேசியா ஏரியேட்டா" என்று அழைப்பர். 

இந்நிலை இருந்தால், தலைமுடி அதிகம் உதிரும் ஆனால் மீண்டும் முடி வளராமல் வழுக்கை ஏற்படும். பொதுவாக இப்பிரச்சனையால் 40-45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 

ஆனால் தற்போது இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆயுர்வேதத்தில் பித்தம் உடலில் அதிகம் இருந்தால், தலைமுடி உதிர்ந்து வழுக்கை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது

You can use this 4 tips to bump your hair on the head believe in ...

கற்பூர எண்ணெய்

முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் கற்பூர எண்ணெய் செயல்படுகிறது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் இது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது.

இது உச்சந்தலையை வறண்டு போகச் செய்வதும், முகத்தை வறட்சியாக்கும். தேம்பல் மற்றும் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும்.

எலுமிச்சை எண்ணெய்

சிலர் தலைமுடியை லேசாக பளபளப்பாக மாற்ற எலுமிச்சம்பழத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் மறுபுறம், இது உங்கள் தலைமுடியை மேலும் சேதப்படுத்தும். எலுமிச்சை எண்ணெய் பல ரசாயனங்களளைக் கொண்டுள்ளது. இதனால், தலைமுடிக்கு எலுமிச்சை எண்ணெய் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது, தலைமுடியின் அடர்த்தியை குறைத்து, வறண்டு போகச் செய்யும்.

கனிம எண்ணெய்

கனிம எண்ணெய் என்பது பெரும்பாலும் பெட்ரோலியம், வெள்ளை பெட்ரோலியம், பாரஃபின், திரவ பாரஃபின், திரவ பெட்ரோலேட்டம் மற்றும் பாரஃபின் மெழுகு என பலவற்றால் தயாரிக்கப்படுகிறது. இவை கூந்தலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியவை.

எனவே முடி பராமரிப்பு பொருட்களை வாங்கும் போது, அதில் மினரல் ஆயில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மினரல் ஆயில் பயன்படுத்தினால், தோலில் வீக்கம், அரிப்பு, உச்சந்தலையில் எரிச்சல் அல்லது சொறி போன்ற பல ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படலாம்.