சிறுநீரை அடக்குபவர்களை முடக்கி போட காத்திருக்கும் நோய்கள்

 
urin

 

இன்றைய சூழ்நிலையில் பலர் பிரயாணத்தில் போவதாலும் ,ஆபீஸ் வேலைகளிலும் ,கழிப்பறை சுத்தமில்லாமல் இருப்பதாலும் சிறுநீரை அடங்குகின்றனர் .இதனால் உடலில் பல உடல் நல கோளாறுகள் ஏற்படுகிறது ..

அதுமட்டுமின்றி இது பல மோசமான ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகின்றது. அந்தவகையில் சிறுநீர் அடக்குவதால் ஏற்படும் பிரச்சினை பற்றி தெரிந்து கொண்டு அதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்  

holding your urine

பல அலுவல் காரணமாக வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு ,அது கிட்னியில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து காத்திருக்கிறது 

சிறுநீரை அடக்குவதால் சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்துவிடும் .இதனால் , சிறுநீரை தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து விடுகிறது .இதனால் உடலில் பல்வேறு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தி .அடிக்கடி ஸ்கேன் ,மருந்து மாத்திரை என்று அலைய வேண்டிய சூழல் ஏற்படும் 
பல்வேறு சூழல் காரணமாக சிறுநீரை அடக்குவதால் இடுப்பு மடி தசைகள் பலவீனம் அடைந்து விடும் , அதனால் உடல் எடையை வேகமாக குறையும் வாய்ப்புள்ளதாக சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர் .