யூரினை அடக்கி வைப்பது எந்த நோய்க்கு வழி செய்யும் தெரியுமா ?

 
urin urin

பொதுவாக இன்று இருக்கும் வாழ்வியல் முறையில் பலருக்கும் அடிக்கடி யூரின் தொற்று உண்டாகிறது .இந்த சிறுநீர் பாதை தொற்றுக்கு என்னதான் சிகிச்சை எடுத்தாலும் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது .எனவே இந்த தொற்று வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சிலருக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் அடிக்கடி உண்டாகும் .இந்த பாதிப்புக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை நம் நாட்டில் கணிசமாக அதிகரித்துவருகிறது..
2.நம் நாட்டில் பெண் குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தாலும் வெளி இடங்களில் இருக்கும் போது இதை அடக்கி வைக்கவே முயற்சிப்பார்கள். 
3.இதனாலும் இந்த சிறுநீர் தொற்று நேரிடுகிறது. 
4.அதனால்  பள்ளி, கல்லூரி மற்றூம் வேலைக்கு செல்லும் பெண்கள். பழச்சாறுகள், எலுமிச்சை கலந்த நீர் குடிப்பது அவசியம் .இவை எல்லாமே உங்கள் உடலில் நீரிழப்பு உண்டாக்காமல் தடுக்கும்.
5. அதனால் பெண்களும் ஆண்களும் ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பிறகும் 2 டம்ளர் தண்ணீர் குடியுங்கள். 
6.அதனால் வெளியில் செல்லும் போதும் தண்ணீர் குடிப்பதை மறந்துவிட வேண்டாம். 
7.நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் என்பதை கணக்கில் வையுங்கள். இதில் பழச்சாறுகளும் அடங்கும்.
8.அதனால் அனைவரும் சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும்போதே சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். 
9.இந்த யூரினை  அடக்கி வைப்பதும், பிறகு வீட்டுக்கு வந்ததும் அவசரமாக விரைந்து கழிப்பறை சென்று வெளியேற்றுவதும் பாக்டீரியாவை உள்ளேயே தேக்கிவிட செய்யும். 
10.இந்த யூரின் தொற்றை  தவிர்க்க உணவு முறையிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்