அருகம்புல்லுடன், நெருஞ்சில் செடியை காய்ச்சி குடிச்சா ,எந்த நோயை துவைச்சு எடுக்கலாம் தெரியுமா ?
பொதுவாக நெருஞ்சில் ஒரு மருத்துவ குணம் மிக்க மூலிகை செடியாகும்.இது மணற் பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து வளர்ந்து காணப்படும் .மேலும் இந்த செடியை கொண்டு பல நோய்களை குணப்படுத்தலாம் .இந்த நெருஞ்சில் கொண்டு எந்தெந்த நோய் வராமல் தடுக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.நெருஞ்சில் செடியின் தண்டு,இலை,வேர் ,பூ,காய்,மற்றும் முள் அனைத்துமே நம் உடலுக்கு மருந்தாக பயன்படுகிறது.இதன் மூலம் பல நோய்கள் வராமல் தடுக்கலாம்
2.சிலருக்கு கிட்னியில் கல் இருக்கும் .நெருஞ்சில் சிறுநீரக கல்,நீரடைப்பு, வெள்ளை நோய்,நீர் எரிச்சல்,வண புள்ளி,மேகம் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக காணப்படுகிறது.
3. சிலருக்கு குழந்தை இல்லாமல் இருக்கும் .நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல் போன்ற வேலைகளை செய்யும்.
4.சிலரை உஷ்ண நோய்கள் பாடாய் படுத்தும் .அவர்கள் ஒரு பிடி அருகம்புல்லுடன், இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் பிடிங்கி சுண்டக் காய்ச்சி வெறும் வயிற்றில் குடித்தால் உடல் வெப்பம் தணியும்
5.இந்த நெருஞ்சில் காய்ச்சிய நீரினை குடித்தால் நீர் வடிதல், சிறுநீர் சொட்டாக வருதல் , கண் எரிச்சல், போன்றவை குணமாகும்.
6.நெருஞ்சில் வேரையும் , காயையும் ஒரே அளவாக எடுத்து கொள்ளவும் .அதனுடன், பச்சரிசி சேர்த்து கஞ்சி காய்ச்சவும் .இதை தொடர்ந்து குடித்து வர நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர்க்கடுப்பு குணமாகும்.


