சிறுநீர் தொற்று பிரச்சனையிலிருந்து விடுபட இந்த நீர் உதவும்
பொதுவாக கோடை காலத்திலும்,குளிர் காலத்திலும் நமக்கு அடிக்கடி தோன்றுவது சிறுநீர் தொற்று ஆகும் .இந்த சிறுநீர் தொற்றுக்கு ஆங்கில வைத்தியரிடம் சென்றால் ஏராளமான டெஸ்ட் எடுத்து நம் பர்ஸை காலி செய்து விடுவதுண்டு .ஆனால் இயற்கை வைத்தியம் மூலம் எப்படி இந்த சிறு நீர் தொற்றை குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம்
1.நெல்லிக்காயில் வைட்டமின் C நிறைந்துள்ளது.
2.இது குளிர்ச்சியான விளைவை கொண்டுள்ளதால் சிறுநீர் தொற்று பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3.ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன் 4-5 ஏலக்காய் விதைகளை அரைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொற்று குணமாகும்.
4.சிறுநீர் தொற்று பிரச்சனையிலிருந்து விடுபட இளநீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
5.இது உடலை உள்ளிருந்து நீரேற்றமாக வைத்துக் கொள்வதுடன் வயிற்றையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.
6.சிறுநீர் தொற்றிலிருந்து நிவாரணம் பெற இளநீர் குடிக்கலாம்.
7.தொற்று நோயிலிருந்து உடலை பாதுகாக்க கூடிய ஏராளமான நற்பண்புகள் தயிரில் நிறைந்துள்ளன. 8.எனவே சிறுநீர் தொற்று பிரச்சனைக்கும் தயிர் உதவும். .
9.ஏலக்காய் சாப்பிடுவது சிறுநீர் தொற்றுக்கு நன்மை தரும்.
10.சிறுநீர் தொற்றிலிருந்து விடுபட 5-6 ஏலக்காய் விதைகளை அரைத்து அரை டீஸ்பூன் சுக்கு பொடியுடன் கலந்து வெந்நீருடன் சேர்த்து குடிக்கலாம்.
11.ஆப்பிள் சிடர் வினிகரை சரியான முறையில் சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ளும் பொழுது பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
12.ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தேன் கலந்து குடிப்பதன் மூலம் சிறுநீர் தொற்றின் அறிகுறிகளை குறைக்கலாம்

