அல்சரை தடுக்க எப்போ எப்படி தண்ணீர் குடிக்கணும் தெரியுமா ?

 
water

 

பலர் பணத்துக்காக ஓடி ஓடியே ஆரோக்கியத்தினை இழக்கிறார்கள் .அப்படி ஓடுபவர்கள் சாப்பிட கூட நேரமில்லாமல் உழைக்கிறார்கள் .அதன் விளைவு அல்சரால் பாதிக்கப்படுவது ,நேரத்துக்கு குறிப்பாக காலை உணவை தவிர்ப்போக்கு அல்சர் நிச்சயம் .இந்த அல்சருக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு அவசியம் .குறிப்பாக மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் .அதிக மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும் .அது மட்டுமில்லாமல் இயற்கை வழியில் குணப்படுத்த பல எளிய உணவு முறைகளை கடை பிடிக்கலாம் .தேங்காய் ஒரு ஸ்லைஸ் சாப்பிடுவதும் ,புதினா சேர்த்த உணவுகளை சாப்பிடுவது கூட அல்சரை குணபடுத்தும்

ulcer

 

மேலும் சிலர் அதிக அளவில் மது அருந்துதல், புகைப்பிடித்தல்போன்ற  தவறான  பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பர் ,அதை அவர்கள் விட வேண்டும் ., மேலும் அசுத்தமான பழக்கங்கள், கைகளை கழுவாமல் உணவு உண்பது, கைவிரல் நகத்தை கடிப்பது, அதிக டீ மற்றும் காபி குடிப்பது, ஆஸ்பிரின் போன்ற மருந்துகள், , டென்ஷன், மனபரபரப்பு, அடிக்கடி உணர்ச்சி வசப்படுவது இப்படி பல காரணங்களால் அல்சர் வந்து ஆயுள் முழுவதும் அவஸ்த்தை படுகின்றனர்

மேற்கண்ட அசுத்தமான பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் அந்த தவிர்த்தால், வயிற்றில் அல்சர்  வருவதை தவிர்த்து விடலாம். மேலும், சரியான நேரத்தில், அதாவது பசிக்கும் போது கால தாமதம் செய்யாமல் உடனே உணவு உண்ண வேண்டும். உணவு உண்பதற்கு 30 நிமிடங்கள் முன்பாகவும், உணவு உண்ட பிறகு 30 நிமிடங்கள் கழித்தும் தண்ணீர் குடிப்பது கூட அல்சர் நோய் தாக்காமல் நம்மை காக்கும் .